Breaking News

Tuesday, 3 September 2013

மகா ஜனங்களே நான் அவதூறு சாமியாக போறேன் - வீடியோ எடுக்கலாம் வாங்க!!

இது ஒரு வெவகாரமான பதிவு! 

எங்கள் அன்பிற்கும், பண்பிற்கும் பாத்திரமான சுவாமிஜி ஆரூர் செந்திலானந்தாவின் நேற்றைய பதிவைப் படித்ததன் விளைவு, நானும் ஓர் சாமியாராகலாம் எனும் ஐடியாவை தந்திருக்கிறது. சுவாமிஜி செந்திலானந்தாவின் பணிப்பின் பேரில் ஆஸ்திரேலியாவில் அவருடைய ஓர் ஆச்சிரமக் கிளையினைத் திறக்க முடிவு செய்துள்ளேன். பாவாடை சாமி, பத்மாசன சாமி, கதர் வேட்டி சாமி, அரோகரா சாமி, அப்புசாமி சாமி இந்த சாமியர் வரிசையில் நானும் அவதூறு சாமியாகலாம் என முடிவு செய்துள்ளேன். 

என்ன யோசிக்கிறீங்க, அவதூறு சாமி என்றால் என்னவென்றா? ஆபாச பதிவு என்பது தமிழில் அவதூறான விடயம் என்று சொல்றாங்க. அதால அவதூறு சாமியாகலாம் என முடிவு செய்துள்ளேன். என் ஆச்சிரமத்தில் நடிகைகள் எல்லாம் வந்து போகும் வண்ணம் சூட்டிங் ஸ்பார்ட் ஒழுங்கு செய்யவுள்ளேன். தவிர இங்கே முகம் சுளிக்கும் விடயங்கள் ஏதும் இடம் பெறாது என்பதால் நீங்கள் பயமின்றி வீடியோ கமராக்களுடன் வரலாம்! 
தியானமும், தீட்சையுமே என் ஆச்சிரமத்தில் வழங்கப்படும்! விசேடமாக மதப் பதிவுகள் எழுதி எப்படி தமிழ் மண மகுடத்தில் ஏறலாம் எனும் சித்த சர்வாத்மக பயிற்சியும் வழங்கப்படும்! 
இந்தப் பதிவினை மனப் பொறுமையுடன் படித்த உங்கள் அனைவரையும் சிவபெருமானும், திருச் செந்தூர் முருகனும் அன்னை வேளாங்கன்னியும் ஆசிர்வதிக்கட்டும்! 

என் சங்கத்தில் நீங்கள் இணைய விரும்பின், இப்பொழுதே ஆன்லைன் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள். 
நன்றி! 
அகிலமெங்கும் அருட்காட்சி பரவட்டும்! 

No comments:

Post a Comment

Designed By Blogger Templates