பத்துல சனி. பக்கத்திலேயே சந்திரன். எதுத்தாப்ல ராகு. ஏழு வீடு தள்ளி புதன்னு நம்மள சுத்தி எப்பவும் கெரகங்களோட செக்யூரிடிதான்! சில நேரங்கள்ல இந்திராகாந்தியை போட்டு தள்ளின மாதிரி அதுல சிலது நம்மளை போட்டு தள்ற கொடுமையும் நடக்கும். முன்னெல்லாம் கிராம புறங்களில் ஆர்ஐஎம்பி ன்னு ஒரு ராஜ வைத்தியர் சைக்கிள்ல கிளம்புவாரு. ‘ஜுரம் வாந்தி பேதிக்கு வைத்தியம் பாக்குறது’ன்னு சத்தம் போட்டு கூவாத குறைதான். மற்றபடி அவரு அடிக்கிற சைக்கிள் பெல்லை காதால கேட்டே ‘அதோ டாக்டரே வந்திட்டாரேன்’னு சந்தோஷப்பட்டவங்களும், குணமாகி குத்த வச்சவங்களும் உண்டு. இப்படி குப்புற கிடந்த சமுதாயம் இன்னைக்கு லேசா நிமிர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரைக்கும் வந்திருச்சு.ஆனா சில ராஜ வைத்தியருங்க சாமர்த்தியத்துல இன்னும் குப்புறதான் கிடக்கு கோடம்பாக்கம். இந்த வைத்தியருங்க செய்யுறது வைத்தியம் இல்ல. கிரகங்களை சொல்லி கிறுக்கு பிடிக்க வைக்கிற பைத்தியம்! ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் ஒரு ஆஸ்தான ஜோசியரு இருப்பாரு. பூஜையில ஆரம்பிச்சு, ரிலீஸ் டேட் வரைக்கும் இவங்க சொல்றதுதான் டைம். ‘தேங்காய் உடைச்சேன்.தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
No comments:
Post a Comment