இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பெருமையோடு அழைக்கப்படும் பிரபுதேவாவின் மெழுகுச் சிலையை உருவாக்கியுள்ளனர் பாலிவுட் ரசிகர்கள். அதனை இன்று திறந்து வைத்த பிரபுதேவா நெஞ்சுருகி ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லொனவாலா வேக்ஸ் மியூசியத்தில் பிரபு தேவாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தா பிரபுதேவா ரசிகர்களின் அன்பினால் நெகிழ்ச்சியடைந்தார்.
நடன இயக்குநர்:
நடன இயக்குநராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த பிரபுதேவா, பின்பு நடிகராகி, அதன்பிறகு இயக்குநராகவும் ஆகிவிட்டார். தமிழ், தெலுங்கில் அவர் இயக்கிய படங்கள் சரியாகப் போகாததால், இந்திக்குப் போனார் பிரபுதேவா.
ரீமேக் படங்கள்:
இந்தியில் இவர் இயக்கிய வாண்டட், ‘ரவுடி ரத்தோர்', ‘ராமையா வஸ்தாவையா' படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது அஜய்தேவ்கான், சல்மான்கான் நடிக்கும் பெயரிடப்படாத இரு படங்களை டைரக்டு செய்கிறார்.
நடனத்திற்கு ரசிகர்கள்:
பிரபுதேவா நடனத்துக்கு இந்திபட உலகில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்கள் இந்த மெழுகு சிலையை உருவாக்கியுள்ளனர்.
மகிழ்ச்சியான நாள்:
இதுபற்றி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள பிரபுதேவா, இது என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மிகவும் முக்கியமான நாள். என்னுடைய மெழுகுச் சிலையை நான் தொட்டுப்பார்த்தேன். அதை உருவாக்கிய குழுவினருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
தத்ரூபமான சிலை:
லண்டன் மியூசியத்தில் அமிதாப்பச்சன், சச்சின், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் போன்றோருக்கு மெழுகு சிலைகள் உள்ளன. பிரபு தேவாவின் சிலை லண்டன் மியூசியத்தில் உள்ள சிலைகள் போல தத்ரூபமாக இருக்கிறதாம்.

No comments:
Post a Comment