Breaking News

Tuesday, 3 September 2013

சிவகார்த்திகேயனின் கெரியருக்கு ஆப்பு வைக்க வதந்தியை பரப்பும் விஷமிகள்....


சென்னை: சிவகார்த்திகேயன் அசுர வேகத்தில் வளர்வதைப் பார்த்து வயித்தெரிச்சல் படுபவர்கள் தான் அவரைப் பற்றி வதந்தியை பரப்பி வருவதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன். கை நிறைய படங்களுடன் ஜாலியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கும் பிந்து மாதவிக்கும் இடையே காதல் என்றும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்டது.

இதை கேட்டு ஆடிப்போன சிவகார்த்திகேயன் அய்யய்யோ நான் என் மனைவியைத் தவிர வேறு யாரையும் காதலிக்கவில்லை, இது வெறும் வதந்தி என்றார். சிவா இப்படி அலறுகிறார் ஆனால் ஏன் அவரைப் பற்றி அப்படி ஒரு பேச்சு வந்தது என்று கோலிவுட்டில் உள்ள சிலர் அலசி ஆராய்ந்தனர்.

இறுதியில் சிவாவின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத சிலர் வயித்தெரிச்சலில் அவரது கெரியரை டேமேஜ் செய்ய இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பு வருவது தெரிய வந்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் www.tamilstarshot.blogspot.in வாருங்கள். எங்கள் Facebook பக்கங்களில் தொடர்பில் இருங்கள்...

No comments:

Post a Comment

Designed By Blogger Templates