Breaking News

Saturday, 14 September 2013

அசாராம் பாபுவா...யாருங்க அது? எனக்கு தெரியாதே : மல்லிகா செராவத்


பாலியல் சிக்கலில் சிக்கி சிறையில் உள்ள அசாராம் பாபு யாரென்ரே தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என வெள்ளித்திரையில் கவர்ச்சி மழை பொழிந்து வந்த நடிகை மல்லிகா ஷெராவத், தற்போது மேரே கயலோன் கி மல்லிகா என்று பெயரிடப்பட்டுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். விரைவில் ஒளிபரப்பாக உள்ள அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் தான், அசாராம் பாபு யாரென்றே தனக்கு தெரியாது என அதிரடி ஷாக் கொடுத்ததோடு, பெண்களுக்கும், சமுதாயத்துக்கும் சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளாராம் மல்லிகா. அவற்றில் சில....

வாழ்க்கைத்துணைத் தேர்வு...

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் சமுதாயத்திற்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒவ்வொரு பெண்ணும் தனக்கான துணையை தங்களுடைய சுய விருப்பத்தின்படி தானே தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

பிற்போக்குவாதிகள்... 

இந்தியப் பெண்கள் பிற்போக்குவாதிகளாக உள்ளனர். தினந்தோறும் பாலியல் குற்றங்கள் நடை பெறுகின்றன.

தொடரும் பாலியல் குற்றங்கள்.... 

டெல்லி பாலியல் பலாத்கார குற்றத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு இத்தகைய தவறுகள் நடைபெறாது என எண்ணி இருந்தேன். ஆனால், அது இன்னும் தொடர்கதையாகவே உள்ளது.

நான் தைரியசாலி.... 

இவ்வளவுக்குப் பிறகும், இந்தியப் பெண்கள் முன்னேறியுள்ளனர் என்று உங்களால் கூற முடியுமா... நான் அப்படிக் கூற மாட்டேன். அதற்கான தைரியம் என்னிடம் உள்ளது. எந்தப் பெண்ணாவது இந்தியா முன்னேறி வருகிறது என்று சொன்னால் அது சுத்தப் பொய். இப்படிப் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும்....'எனக் கூறினார்.

அப்படி யாரையும் தெரியாது... 

நிகழ்ச்சியில் ஆசாராம் பாபு பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ‘ஆசாராம் பாபுவா யார் அது, எனக்குத் தெரியாதே...' என மழுப்பலான பதிலைத் தெரிவித்துள்ளார் மல்லிகா.


No comments:

Post a Comment

Designed By Blogger Templates