Breaking News

Sunday, 1 September 2013

மீண்டும் ரிலீஸான ‘மங்காத்தா’: தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்!!!

சென்னை: மங்காத்தா படம் ரிலீஸாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தை அடுத்து நடந்த சிறப்பு காட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த மங்காத்தா படம் ரிலீஸாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் இந்த சிறப்பு தருணத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள நியூ கிளியோபாட்ரா தியேட்டர் மங்காத்தாவின் சிறப்பு ஷோவுக்கு ஏற்பாடு செய்தது. சிறப்பு ஷோ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படம் ரிலீஸான ஆகஸ்ட் 31ம் தேதி நடந்தது.
அட யுவன் பிறந்தநாளும் கூட சிறப்பு ஷோ நடந்த நேற்று மங்காத்தாவின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமோக வரவேற்பு மங்காத்தா சிறப்பு ஷோவுக்கான டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. மேலும் அஜீத் ரசிகர்கள் ஏராளமானோர் தங்களுக்கும் டிக்கெட் கிடைக்காதா என்று தெருக்களில் எல்லாம் நின்று கொண்டிருந்தனர்.
டிக்கெட் விற்றுவிட்டது தெருக்களில் நின்ற ரசிகர்களிடம் டிக்கெட் தீர்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர். அதை கேட்ட ரசிகர்கள் நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு நின்றாவது படத்தை பார்க்க அனுமதியுங்களேன் என்று கேட்டுள்ளனர்.
டிக்கெட் வசூல் மங்காத்தா சிறப்பு ஷோ மூலம் கிடைத்த பணம் தூத்துக்குடியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் பார்வையற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்படுகிறது.....

No comments:

Post a Comment

Designed By Blogger Templates