Breaking News

Sunday, 1 September 2013

ஜில்லா’வில் விஜய் ரொம்பவே ஹேன்ட்சமாக வருகிறாராம்!!!!



சென்னை: ஜில்லா படத்தில் விஜய் மிகவும் அழகாக இருப்பாராம். ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் ஜில்லா. தலைவாபிரச்சனைகளால் கவலையில் இருந்த விஜய் தற்போது தான் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இந்நிலையில் ஜில்லா படம் வெற்றியடைய நடிகர் ஜீவா பழனி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார். ஜில்லாவில் விஜய் நீங்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு மிகவும் அழகாக இருப்பார் என்று கூறப்படுகிறது. மதுரைக்காரனாக கெத்தாக வரும் விஜய்யின் ஜில்லா தற்போதே அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக படத்தில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் நீக்கிவிட்டார். மேலும் தன் படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களோ, யாரையாவது தாக்கிப் பேசும் வசனங்களோ இருக்கவே கூடாது என்று அவர் கறாராக தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது......

No comments:

Post a Comment

Designed By Blogger Templates