மும்பை:
சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் ஐஸ்வர்யா ராய் குத்தாட்டம் போடுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த வாய்ப்பு பிரியங்கா சோப்ராவுக்கு சென்றுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவை வைத்து எடுத்துள்ள படம் ராம் லீலா.
பாலிவுட் படங்களில் நிச்சயம் ஒரு குத்துப் பாட்டு இருக்கும் என்பது எழுதப்படாத விதியாகவிட்டது. அதற்கு ராம் லீலா ஒன்றும் விதிவிலக்கல்ல. சஞ்சய் லீலா பன்சாலிக்கு பிடித்த நடிகையான ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் குத்தாட்டம் போடுவார் என்று கூறப்பட்டது.
பிரசவத்திற்கு பிறகு
ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் ராம் லீலா மூலம் அவர் மீண்டும் திரையில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
செட்டெல்லாம் கூட ரெடி
ஐஸ்வர்யா ராய் ஆட மும்பையில் செட்டெல்லாம் ரெடியாகிவிட்டது, ஷூட்டிங் விரைவில் நடக்கும் என்று செய்தி வெளியானது. இதற்கிடையே பன்சாலியை சந்தித்தேன். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஐஸ்வர்யா கூட தெரிவித்திருந்தார்.
ஐஸ் அவுட்
ராம் லீலா படத்தில் ஐஸ்வர்யா ஆடவில்லையாம். பிரியங்கா சோப்ரா தான் ஆடுகிறாராம். பிலிம் சிட்டியில் அடுத்த வாரம் ஷூட்டிங் நடக்கிறதாம்.
ஐஸுக்கு பெருசா
பன்சாலி குத்துப் பாடலுக்கு ஆடுவது குறித்து பிரியங்காவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பேசிவிட்டாராம். ஆனால் பிரியங்காவுக்கு டேட் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் தான் ஐஸிடம் பேசியுள்ளார் போல. பின்னர் பிரியங்காவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பன்சாலி ஐஸ்வர்யா ராய்க்கு ஏதோ பெரிதாக திட்டமிடுகிறாராம். ஒரு வேளை அது தனி படமாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
More News Click This Link : http://bit.ly/173auT4
Thanks : thatstamil
No comments:
Post a Comment