Breaking News

Wednesday, 21 August 2013

தனுஷ் பற்றி யாருக்கும் தெரியாத புது தகவல்

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் பற்றி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்.


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே, தனுஷின் காதல் கொண்டேன் படத்தைப் பார்த்து அவரை இந்தியில் அறிமுகப்படுத்த விரும்பியதாகத் தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர்.

சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான ராஞ்சனா இந்திப்படம் வசூலைக் குவித்தது.

அப்படம் பற்றி திரைத்துறையினைச் சேர்ந்த பலரும் தனுஷை வாழ்த்திக் கொண்டிருக்க போனி கபூரோ வேறு விதமாக தனுஷைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் மிஸ்டர். இந்தியா, புஹார், வாட்டட் போன்ற வசூல் சாதனை படைத்த படங்களைத் தயாரித்தவர் போனிகபூர்.

இவர் நம்மூர் ஸ்ரீதேவியின் கணவரும் ஆவார்.

இவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதில், தனுஷின் இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தை தான் மிகவும் ரசித்துப் பார்த்ததாகவும், அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பட விஷயமாக தான் தனுஷை சந்தித்து டோக்கன் அட்வான்ஸாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


பின்பு, இருவருமே தங்களது படங்களில் பிசியாகிப் போனதால் பட வேலைகளைத் தொடர முடியாமல் போனதாகவும், இல்லையேல் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே தனுஷ் இந்தியில் அறிமுகமாகியிருப்பார் என கூறியுள்ளார் போனி.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates