Breaking News

Thursday, 29 August 2013

சிம்புவின் நல்ல மனசு, மெச்சும் தனுஷ்...

எதிர்நீச்சல் படத்தை தனது வொண்டர்பார் பிலிம்சுக்காக தயாரித்த தனுஷ், இப்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தையும் தானே தயாரித்து வருகிறார். அதோடு, இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து புதுமுகங்கள் நடிக்கும் காக்கா முட்டை என்றொரு படத்தையும் தயாரிக்கிறார்.


சேரி மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம். அதனால் அதில் ஒரு முன்னணி நடிகர் யாராவது நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தனுசும், வெற்றிமாறனும் பேசிக்கொண்டார்களாம். இந்த விசயம் எப்படியோ சிம்புவின் காதுக்கு செல்ல, தானே தனுசை தொடர்பு கொண்டு அந்த படம் பற்றியும், அதில் உள்ள கதாபாத்திரம் பற்றியும் கேட்டறிந்தாராம்.

அப்போது, அந்த கேரக்டர் சிம்புவை வெகுவாக பாதித்து விட, நானே நடிக்கிறேன் என்று சொன்னாராம். அவரிடமிருந்து அப்படியொரு வார்த்தை வரும் என்று சற்றும் எதிர்பார்க்காத தனுஷ், இன்ப அதிர்ச்சியடைந்தாராம். உடனே சிம்புவே முன்வந்து இந்த விசயத்தை வெற்றிமாறனிடமும் சொல்லி, சிம்பு நடிப்பதை உறுதிபடுத்தி விட்டாராம்.

ஆக, இத்தனை நாளும் சிம்பு-தனுசுக்கிடையே தொழில் போட்டி இருந்து வருவதாக வெளியான செய்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு, அவர்களின் நட்பினை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates