நடிகர் ஜெய், தற்போது அறிமுக இயக்குனர் அட்லி இயக்கும் ‘ராஜா ராணி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இணை தயாரிப்பாளரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் பிரத்யேக காட்சிகளை பார்த்த பின்னர் ஜெய் பற்றி புகழ் பாடிய வண்ணம் உள்ளார்.
இதுகுறித்து முருகதாஸ் கூறும்போது, என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படத்திலேயே ஜெய்-ன் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் தொழில் பக்தி உள்ள, நேர்மையான, திறமையான நடிகர் அவர்.
என்னுடைய கணிப்பின்படி அவர் பெரிய அளவில் பிரகாசிக்க வேண்டிய நடிகர். நிச்சயம் பிரகாசிப்பார். ‘ராஜா ராணி’ படத்தில் அவருடைய கதாபாத்திரம் அவருக்கென உருவாக்கப்பட்டதுபோல் பொருத்தமாக உள்ளது என கூறினார்.
‘ராஜா ராணி’ படத்தில் ஜெய் மற்றும் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நஸீம், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ஜெய் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

No comments:
Post a Comment