Breaking News

Thursday, 29 August 2013

ஜில்லா’ படப்பிடிப்பில் சில்மிஷம் : விஜய் டென்ஷன்?

தலைவா’ சிக்கலே இப்போது தான் தீர்ந்தது, அதற்குள் விஜய்க்கு அடுத்த சிக்கல் ஆரம்பித்து விட்டது.

‘தலைவா’ ரிலீஸ் ஆச்சா இல்லையாங்கிற எந்த கவலையும் இல்லாம நடிக்கிறதோட என்னோட வேலை முடிஞ்சிப் போச்சு என்று கெத்தாக ‘ஜில்லா’ படப்பிடிப்புக்கு போனார் விஜய்.

இருக்கிற டென்ஷனுக்கு இந்த ஸ்பாட் தான் இப்போதைக்கு நமக்கு ‘போதிமரம்’ என்று பின்னி மில்லே கதி என்றிருந்தார் விஜய்.

விஜய் படம் என்பதால் ஜிம் பாய்ஸ் என்று சொல்லப்படும் wwf ரெஞ்ச் பசங்களோட செக்யூரிட்டி கொஞ்சம் ஓவராகவே இருந்ததாம்.
ஆனால் வேலியோ பயிரை மேய்வது போல பாதுகாப்புக்கு நின்னுக்கிட்டிருந்த ஜிம் பாய்ஸ் க்ரூப்புல ஒருத்தர் நடிக்க வந்திருந்த ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டிடம் சிமிஷம் செய்திருக்கிறார்.

அண்ணா.. என்னை விட்டுடுங்கன்னா… என்று அந்த பெண் கூச்சல் போட்டதையடுத்து அவரை வளைத்துப் பிடித்தனர் வந்திருந்த மற்ற ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள்.

அப்புறம் என்ன? அந்த அமைதியாக போய்க்கொண்டிருந்த படப்பிடிப்பில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே ரணகளப்பட்டு விட்டது.

விஷயத்தை கேள்விப்பட்ட அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டின் உறவினர்கள் போலீஸுக்கு கம்ப்ளையிண்ட் கொடுக்க கிளம்ப, ‘பிரச்சினையையை பெருசுபடுத்தாதீங்க’ என ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் அவர்களை சமாதானப்படுத்தியதோடு, நடந்த பிரச்சினைக்கு பிராயச்சித்தமாக ஒரு தொகையையும் கொடுத்து சமாளித்திருக்கிறார்.

ஆனாலும் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இதனால் விஷயம் அந்தப்படத்துக்கு புரொடக்‌ஷன் மேனேஜர் ரேஞ்சில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்த்து வரும் ஆர்.பி.செளத்ரியின் மூத்த மகனான ‘ஜித்தன்’ ரமேஷ் காதுகளுக்குப் போனது.

அவரோ, அந்த செக்யூரிட்டியும் வேணாம், அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டும் வேணாம் என ரெண்டு பேருக்கும் பேக்கப் சொல்லியிருக்கிறார்.

இதனால் டென்ஷனான அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டின் உறவினர்கள் போகிற போக்கில் அத்துமீறிய ஜிம் பாய்ஸின் டூவீலரை லவட்டிக் கொண்டு போய் விட்டார்களாம்.

விஷயம் விஜய்யின் காதுகளுக்கு போக ஏங்ணா.. என்னை கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா..? என்று ஸ்பாட்டில் உள்ளவர்களிடம் டென்ஷனில் கத்தி விட்டாராம் விஜய்

No comments:

Post a Comment

Designed By Blogger Templates