விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி திரைப்படம் ரிலீஸாவதற்குள் பல இடையூறுகளை சந்தித்தாலும், ரிலீஸான பிறகு பல பாராட்டுக்களைப் பெற்றது. துப்பாக்கி ரிலீஸின் போதே ஏ.ஆர்.முருகதாஸ் ’விஜய்க்காக இன்னொரு கதையும் வைத்திருக்கிறேன். கூடிய விரைவில் நாங்கள் மறுபடியும் இணைவோம்’ என்று கூறியிருந்தார்.

எனவே எப்போது இவர்கள் இருவரும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பரவலாக காணப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன் அடுத்த படத்திற்கான பணி என கோலிவுட் பக்கமே அதிகம் தலைகாட்டிக்கொண்டிருந்த சமயத்தில் விஜய்-முருகதாஸ் இணையும் திரைப்படத்திற்கு ‘அதிரடி’ என டைட்டில் வைத்திருப்பதாக செய்தி வெளியானது.
அதிரடி டைட்டில் திரையுலகம் முழுவதும் தீயாய் பரவ, சமீபத்தில் நடந்த ராஜா ராணி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முருகதாஸ் அதை தண்ணீர் ஊற்றி அணைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முருகதாஸ் “விஜய் படத்திற்கு நான் இன்னும் டைட்டில் வைக்கவில்லை” என்று கூறிவிட்டார்.
அதிரடி என்ற டைட்டிலை அதிரடியாய் கொண்டாட காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததோடு, 2014-ல் தான் அந்த புராஜக்ட் துவங்கவிருக்கிறது என்ற செய்தியால் கவலையில் இருக்கின்றனர். Thanks nakkheeran
No comments:
Post a Comment