ஆஸ்கர் பிலிம்ஸ்தான் நஸ்ரியா நசீமை திருமணம் என்னும் நிக்கா படத்துக்காக தமிழுக்கு கொண்டு வந்தது. ஆனால், அந்த படத்தில் நடித்து வரும்போதே, நேரம், ராஜா ராணி படங்களில் கமிட்டாகி விட்டார் நஸ்ரியா.
அதையடுத்து, நேரம் படம் வெளியாகி ஓரளவு ஓடியதால், நஸ்ரியாவின் முகம் கோலிவுட் இயக்குனர்களை கவர்ந்திழுகக, அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்தில் கமிட்டானார் நஸ்ரியா.
இப்படி வேகவேகமாக பல படங்களில் அவர் நடிப்பதைப்பார்த்து இப்போது ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தையடுத்து கார்த்தி நடிக்கும் புதிய படம் மற்றும் ஜீவா நடிக்கவிருக்கும் நீ நல்லா வருவடா என்ற படத்துக்கும் புக் பண்ணியுள்ளனர்.
நஸ்ரியாவின் இந்த அதிரடி பிரவேசத்தினால் மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகள் ஆடிப்போயிருக்கிறார்கள்.
குறிப்பாக, கோலிவுட்டின் தற்போதைய முன்னணி நடிகைகள் என்று கூறப்படும் ஹன்சிகா, காஜல்அகர்வால், அமலாபால் போன்ற நடிகைகளே, வந்த வேகத்திலேயே இத்தனை முன்னணி நடிகர்களின் படங்கள் எப்படி இவருக்கு கிடைத்தது என்பது புரியாமல் குழம்பிப்போய் நிற்கிறார்கள்.
No comments:
Post a Comment