தலைவா படத்தை அமலா பால் பெரிதும் எதிர்பார்க்கிறார். மைனா படம் மூலம் நடிக்கத் தெரிந்த நடிகை என்று அமலா பால் பெயர் எடுத்தவர்.
அதையடுத்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள் என்றால் அது தெய்வத் திருமகள் மற்றும் வேட்டை ஆகும்.
இந்நிலையில் அம்மணி எதிர்பார்த்தது போன்று அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தத் துவங்கினார்.
தெலுங்கில் ஓகே:
தெலுங்கு திரையுலகில் காஜல், சமந்தா உள்ளிட்டோரின் கை ஓங்கியிருப்பதால் அமலா பாலால் தான் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. இந்நிலையில் அஞ்சலி வேறு தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்துவது அவருக்கு இடைஞ்சலாக உள்ளது என்று கூறப்படுகிறது.
தலைவா:
தமிழில் பெரிய இடத்தைப் பிடிக்கத் துடிக்கும் அமலாவுக்கு விஜய்யுடன் தலைவா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகிறது.தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
No comments:
Post a Comment