ஆனால், காதலில் விழுந்த பிறகு, அடிக்கடி மூட் அவுட் ஆகிவிடுகிறாராம். சமீபத்தில் தெலுங்கு ஷூட்டிங்கில் ஒரு காதல் காட்சியில் நடித்த அம்மணி, எவ்வளவு முயற்சித்தும் முகத்தில் சோகத்தை தவிர்க்க முடியவில்லையாம்.
பல டேக் வாங்கியது தான் மிச்சமாம். காதல், அந்தரங்க புகைப்படம் என ஏகப்பட்ட மனக் குழப்பத்தில் இருக்கிறாராம் நடிகை. இதனால் நடிப்பில் கவனம் செலுத்த மிகவும் சிரமப்படுகிறாராம்.
முன்பெல்லாம் சகஜமாக பேசி பழகி வந்த நடிகை, சமீபகாலமாக தனிமையில் அமர்ந்திருப்பது யூனிட்டையே கவலைப்பட வைத்திருக்கிறதாம்.
சமீபத்தில் கைக்கெட்டிய வாய்ப்பு ஒன்று வாய்க்கெட்டாமல் மற்றொரு நடிகைக்கு போனது கூட இந்தக் காதலால் தான் என கோபத்தில் இருக்கிறாராம் நடிகை.
பேசாமல் இன்னும் கொஞ்ச நாளைக்கு காதலை அறிவிக்காமல் கடலை போட்டே காலத்தை ஓட்டியிருக்கலாமோ என காலங்கெட்டு சிந்தித்து வருகிறாராம்.
More Latest News Click This Link : http://bit.ly/14NOzdE
No comments:
Post a Comment