சமீப காலமாக திரையுலகம் முழுவதும் பரபரப்பாக இருப்பவர் விஜய் தான். தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளால் தலைவலியில் இருந்த விஜய், அடுத்த திரைப்படமான ஜில்லா பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை.

ஆகஸ்டு 20-ஆம் தேதி தலைவா ரிலீஸ் என்று அறிவித்துவிட்டபடியால் மன உளைச்சல் நீங்கி ஜில்லா திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நாளை(20.08.13) முதல் கலந்துகொள்கிறாராம் விஜய். ஜில்லா திரைப்படத்தின் இயக்குனர் நேசன் நாளையிலிருந்து ஆக்ஷன் காட்சிகளை படமாக்க முடிவு செய்திருக்கிறாராம்.
தன்னை தாக்க வரும் எதிரிகளை அடித்து(படத்துக்காக) துவம்சம் செய்யப்போகிறாராம் விஜய். ஆக்ஷன், காதல், காமெடி என எல்லாம் கலந்த ஒரு மசாலா திரைப்படமாக உருவாகவிருக்கிறது ஜில்லா.
2014 பொங்கலன்று ரிலீஸாகும் ஜில்லா, ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் வீரம் திரைப்படத்துடன் மோதவிருக்கிறது. Thanks nakkheeran
No comments:
Post a Comment