கிருஷ்ணகிரி அருகே பீர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, விவசாயி. இவரது மகள் சாவித்திரி (20). கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் டவுன் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருகிறார். அதே பஸ்சில் மேலுமலையை சேர்ந்த கார்த்திகேயனும் (24) தினமும் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக மாணவி சாவித்திரி இருக்கும் சீட் அருகே கார்த்திகேயன் நின்று கொண்டு செல்போனில் ஆபாச படம் காட்டி டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். மேலும், சாவித்திரியை உரசி கேலி, கிண்டலும் செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் கார்த்திகேயனின் தொல்லை அதிகரித்தது. இதுபற்றி சாவித்திரி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கார்த்திகேயனின் தந்தை திம்மராயனை சந்தித்து இதுபற்றி கூறினர். தந்தை சொல்லியும் கார்த்திகேயன் கேட்கவில்லை.
நேற்று மாலை கல்லூரி முடிந்து டவுன் பஸ்சில் சாவித்திரி வீட்டுக்கு திரும்பினார். வழக்கம் போல தனது சேட்டையை ஆரம்பித்தார். இதையடுத்து தனது உறவினர்களுக்கு சாவித்திரி தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த அவர்கள், குருபரப்பள்ளி ஸ்டாப்பில் பஸ் நின்றதும், கார்த்திகேயனை பிடித்து தரதரவென வெளியே இழுத்தனர். அவருக்கு தர்மஅடி கொடுத்து குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து எஸ்ஐ கோவிந்தசாமி வன்கொடுமை சட்டத்தில் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
No comments:
Post a Comment