Breaking News

Tuesday, 30 July 2013

விதார்த்துடன் வினயனின் சிஷ்யன் புதுப்படம்!

மயிலிறகு கொண்டு தடவினாலும் சரி, மண்வெட்டியால் வெட்டினாலும் சரி. இரண்டையும் நச்சென செய்யக் கூடியவர் டைரக்டர் வினயன். மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பாக இவருக்கு தனியாக ஒரு பாராட்டுவிழாவே எடுக்கலாம். அந்தளவுக்கு அவர்களின் வேதனைகளையும் சோதனைகளையும் சொசைட்டிக்கு சொல்லி வந்தவர் இவர். காசி, என் மன வானில், உள்ளிட்ட பல படங்கள் இவரது ஸ்டைலுக்காகவே ஓடியவை.

தற்போது இவரது கூடாரத்திலிருந்து இன்னொரு இயக்குனர் வரப்போகிறார். பெயர் சஜின் வர்கீஸ். இன்று நடிக்கிற அத்தனை ஹீரோக்களும் 'வினயன் சாருடன் ஒரு படத்தில் இணையணும்' என்று கூறிவருகிறார்கள். அந்த வாய்ப்பு இன்னும் வரவில்லை என்றாலும், அவரது சிஷ்யனான இவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விதார்த்.

படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஹீரோயின் வேட்டையும் நடந்து வருகிறது. முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் நடிக்கக்கூடும்.

படம் குறித்து சஜின்வர்கீஸ் கூறுகையில், "இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத புதுமையான கதையமைப்பு கொண்ட படமாகவும், அனைவராலும் பேசப்படக்கூடிய படமாகவும் இந்த படம் இருக்கும். அனைத்து தரப்பு மக்களுடைய மனநிலையை பிரதிபலிக்கின்ற படமாகவும் இப்படம் இருக்கும்." என்றார்.

சாஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஷிகாஜூதின் இந்த படத்தை தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளரான முரளிராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

No comments:

Post a Comment

Designed By Blogger Templates