Breaking News

Thursday, 25 April 2013

ஏடாகூடமான டயலாக்ஸ்... யாருடா மகேஷ் தரப்போகும் அதிர்ச்சி


ஊர்ல இருக்கிற மகேஷுக்கெல்லாம் சந்தோஷத்தை தரப்போகுதோ, சங்கடத்தை தரப்போகுதோ? ஆனால் 'யாருடா மகேஷ்' படத்திற்கு இப்பவே செம எதிர்பார்ப்பு. காரணம் படத்தை வாங்கியிருப்பது ஆதிபகவன் தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன். ஆதி போட்ட நாமத்தை மகேஷ் வந்து அழிப்பான் என்கிற இவரது நம்பிக்கையும் சும்மா வரவில்லை. இப்படத்தின் ட்ரெய்லரை சுமார் ஐந்து லட்சம் பேர் பார்த்து ரசித்தார்களாம். இந்த முதல் ஆச்சர்யத்தையே தாங்க முடியாமல் படத்தை பார்த்த அன்பழகன், 'அட நல்லாயிருக்கே' என்றாராம். அதற்கப்புறம்தான் இருவருக்குமான பிசினஸ் டாகுமென்ட் தயாரானதாக சொல்கிறார்கள் இங்கே.

அவ்வளவு சீரும் சிறப்புமான அந்த ட்ரெய்லரில்தான் ஆபாசத்தை அள்ளிக் கொட்டியிருக்கிறார் டைரக்டர் மதன். ஒய் வோ யூ டி எச்சை யூத்துன்னு சொல்றீங்க, ஆனால் எஸ் வோ யூ டி எச்சை மட்டும் சவுத்துன்னு சொல்றீங்க, அது ஏண்டா என்பது போன்ற நாட்டுக்கு தேவையான ஆராய்ச்சியெல்லாம் இருக்கிறது இந்த ட்ரெய்லரில்.

'ஆளு அபாயகரமானவரா இருப்பீங்க போலிருக்கே?' என்று மகேஷிடம் கேட்டால், 'அப்படியெல்லாம் இல்லீங்க. ட்ரெய்லர்தான் இப்படி வச்சுருக்கோம். தியேட்டர்ல குடும்பத்தோட பார்க்குற மாதிரி டீசண்ட்டாதான் பிரசன்ட் பண்றோம்' என்றார் அவர்.

சோம்பேறி ஹீரோவுக்கும் சுறுசுறுப்பான ஹீரோயினுக்கும் நடுவில் லவ் வருகிறது. இந்த லவ்வுக்கு நடுவில் மகேஷ் என்கிற பெயரும் என்ட்ரி ஆகிறது. 'யாருடா மகேஷ்' என்று தேடிக் கிளம்பும் ஹீரோ, அந்த உண்மையை அறிவதுதான் முழு படமாம். போட்டு தாளிச்சிருக்கோம். முப்பது வயசுக்கு கீழுள்ள அத்தனை பேரும் பார்த்து சிரித்து அனுபவிச்சே ஆகணும் என்கிறார் மதன்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates