Breaking News

Thursday, 25 April 2013

சொந்தக்குரலில் பேசணும்... அனுஷ்காவின் அடங்காத ஆசை


சீட்டுக்கட்டு போல படங்களை கையில் அடுக்கிக் கொண்டேயிருக்கிறார் அனுஷ்கா. அவர் தமிழில் நடித்தாலும் சரி, தெலுங்கில் நடித்தாலும் சரி, இரண்டும் ஒன்றுதான் என்று கணக்குப் போடுகிற அளவுக்கு இருக்கிறது அவரது மார்க்கெட் மவுசு.

தமிழ் படம் என்றால் தெலுங்கிலும், தெலுங்கு படம் என்றால் தமிழிலும் ரிலீஸ் பண்ணி துட்டு பார்க்கிற அளவுக்கு அவர் எல்லாரும் அறிந்த நடிகையாகிவிட்டார். இவ்வளவு பெரிய நடிகையாகிவிட்ட பிறகும் அவரது ஆசை ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது?

ஒரு படத்திலாவது சொந்தக்குரலில் டப்பிங் பேசிவிட வேண்டும் என்பதுதானாம். வி.டி.வி கணேஷ் விக்ஸ் டப்பாவை விழுங்கிவிட்டு பாடினால் எப்படியிருக்குமோ, குரல் அப்படியிருந்து விட்டால் என்னாவது என்று சந்தேகப்பட்ட இயக்குனர்கள், அவரது ஆசையை குறுக்கே விழுந்து கும்பிடு போட்டு தடுத்து வருகிறார்கள். ஆனால் எல்லா டைரக்டர்களை போலவும் அல்லவே செல்வராகவன்?

'அதுக்கென்ன, நீயே பேசு' என்று கூறிவிட்டாராம். இரண்டாம் உலகம் படத்தில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறார் அனுஷ்கா. டப்பிங் கலைஞர்கள் அத்தனை பேரும் கூட்டமாக சேர்ந்து வள்ளுவர் கோட்ட வாசலில் உண்ணாவிரதம் இருக்காமலிருக்க அருள் புரிவீர்களா அனுஷ்கா?

No comments:

Post a Comment

Designed By Blogger Templates