Breaking News

Tuesday, 23 April 2013

ஒரு ரூபாய் கூட வாங்காமல் சிம்பு என் படத்தில் பாடல் பாடிக் கொடுத்தார்.


'ஒரு ரூபாய் கூட வாங்காமல் சிம்பு என் படத்தில் பாடல் பாடிக் கொடுத்தார். என்று இயக்குநர் எஸ்.சிவராமன் கூறினார்.

ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன் சார்பில் உருவாகியுள்ள படம் 'அன்பா அழகா' இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா பிரசாத் லேபில் இன்று (21.04.13) நடைப்பெற்றது.

ஆடியோவை இயக்குநர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டார். நடிகர் விமல் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநர் எஸ்.சிவராமன் பேசும் போது "சின்ன பட்ஜெட் படமென்ற போதும் இவ்வளவு பேர் வந்ததற்கு நன்றி. பொதுவாக பத்திரிகைகள் சின்ன படம் புதுமுகங்கள் படம் என்றால் செய்தி போடுவதில்லை. விமர்சனம் எழுதுவதில்லை. புதிய படத்தைப் பாருங்கள் நல்லா இருந்தால் நல்லா இருக்குன்னு எழுதுங்க இல்லைன்னா நல்லா இல்லைன்னு எழுதுங்க எதுவுமே எழுதாமல் இருப்பது நியாயமா? " என்று கேட்டார்.அதுமட்டுமல்ல இந்த இந்தப் படத்துக்கு ஒரு பாட்டு பாடித்தருமாறு சிம்புவிடம் கேட்டேன். ட்யூன் நல்லா இருந்தால் பாடுகிறேன் என்றார் கறாராக ட்யூனைக் கொடுத்தேன். பிடித்து இருந்தது. உடனே பாடிக் கொடுத்தார்.ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை எஸ்டிஆர். நட்பை மதிப்பவர் எஸ்.டி.ஆர் " என்றார்.

ஆடியோவை வெளியிட்டுப் பேசிய எஸ்.ஜே.சூர்யா பேசும் போது "இந்த படத்தில் பலரோட எனர்ஜி சேர்ந்திருக்கு பல பேருடைய சக்தி சேர்ந்துதான் ஒரு படம் உருவாகுது.படம் என்று புறக்கனிக்க வேண்டாம். சின்னபடம் என்று நினைக்க வேண்டாம் இந்து முஸ்லீம் பிரச்சினை பற்றி எத்தனையோ ப்டம் வந்துள்ளன. இதில் வேறு மாதிரியாக சொல்லியிருக்கிறோம். வாழ்க்கையில் மூணு விஷயம் இருக்குது. கடவுள்,காதல்,இசை இந்த மூன்றும் கலந்ததுதான் வாழ்க்கை. இசையைச் சொல்ல எதையும் ஒரு ரிதம் வேணும் அது சற்று மாறினாலும் நன்றாக வராது ஒவ்வொருத்தருக்கும் எப்போது அழகு வரும்னும் போகுன்னும் தெரியாது. அறிவு வருவதும் போவதும் தெரியாது. இந்த டைரக்டருக்கு இப்போது ரிதம் நன்றாக அமைந்து இருக்குது அது பாடல் காட்சிகளில் தெரியுது. " என்றார்.

நடிகர் விமல், "இதில் நடித்துள்ள புதுமுகங்கள் அனுபவசாலிகளைப் போல நடித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் " என்றார்.

ஐ.பி.எஸ். அதிகாரி ஆறுமுகம் பேசும் போது " எங்களுக்குக் கூட்டம் கூடினாலே பிடிக்காது. கூட்டத்தைக் கலைக்க உடனே 144 போட்டு விடுவோம் . இங்கே நிறைய கூட்டம் இருக்கிறது. தியேட்டரில் நல்லபடம் வந்து கூட்டம் கூடினால் பல பேரும் படம் பார்த்தால் நாட்டில் குற்றங்கள் குறையும். உலகில் சிரிக்கத் தெரிந்த ஒரே மிருகம் மனிதன் தான். மனிதர்களைச் சிரிக்க வைத்து மகிழவைப்பவர்கள் திரையுலகினர்தான். " என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அருள் முருகன், நாயகன் ஆகாஷ் பிரபு,நாயகி ப்ரீத்தி ஆகியோரும் பேசினார்கள்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates