விஷ்ணுவர்தன் படப்பிடிப்பை முடித்துவிட்டு 'சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் அஜித். அதிலும் முதல் நாள் படப்பிடிப்பில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டாராம் அஜித்.
'சிறுத்தை' சிவா இயக்கி வரும் படக்குழுவில் அஜித்திற்கு இயக்குனரை தவிர வேறு யாரும் பழக்கம் இல்லை. இயக்குனருமே கதை சொல்ல வரும் போது மட்டுமே பழக்கம்.
முதல் நாள் முதல் காட்சி எப்படி எடுக்கலாம் என்று இயக்குனர் யோசித்து கொண்டிருக்க, அஜித்துடன் நடிக்கும் வித்தார்த் மற்றும் படக்குழுவினர் அனைவரும் அஜித்தின் நடிப்பை பார்க்க சுற்றி நின்று கொண்டிருந்து இருக்கிறார்கள்.
அஜித்திடம் 'சிறுத்தை' சிவா "சார்.. நீங்க கேமிரா முன்னாடி நின்னீங்கன்னா ஒரு குளோஸ் அப் வச்சு முதல் ஷாட்டை சென்ட்மென்ட்டா எடுத்துரலாம்' என்றார். அதற்கு அஜித் " என்னை வச்சு எடுக்குற ஷாட் எல்லாம் அப்புறம் எடுத்துக்கலாம். முதல்ல சிறு நடிகர்களை கவனிங்க.. மற்றவர்களை வச்சு முதல் ஷாட் எடுங்க.. நான் வேடிக்கை பார்க்கிறேன் " என்று கூறி இருக்கிறார்.
அஜித்தின் இந்த பதிலை பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவினரும் நெகிழ்ந்து விட்டார்களாம். உடனே இயக்குனர் அனைத்து நடிகர்களுடன் அஜித் இருப்பது போல வைத்து முதல் ஷாட்டை எடுத்து இருக்கிறார்.
ஒட்டுமொத்த படக்குழுவும் அஜித்தை பாராட்டி வருகிறது. 'தல'ன்னா சும்மாவா....?
No comments:
Post a Comment