Breaking News

Wednesday, 24 April 2013

ஒரு எச் சேர்த்துருக்கேன்... தமன்னாவின் நியூமராலஜி சென்ட்டிமென்ட்



Actress Tamannah
'யானை வரும் பின்னே, இரைச்சல் வரும் முன்னே' கதையாகிவிட்டது தமன்னாவின் ரீ என்ட்ரி. சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத்துடன் ஜோடி சேரும் தமன்னா, அதற்கப்புறம் கே.வி.ஆனந்த் படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேரப்போகிறாரில்லையா? அதையொட்டிதான் இந்த ஆர்ப்பாட்டம்.
நடுவுல கொஞ்சம் தமன்னாவை காணோம். ஏதும் விசேஷ மாற்றம் இருக்கா என்ற கேள்வியோடு தமன்னாவை விசாரித்தால், யாரும் நினைக்காத மாற்றத்தை போட்டு உடைக்குது பார்ட்டி. தமன்னா என்ற ஆங்கில வார்த்தைகளில் கடைசியாக ஒரு எச் சேர்த்திருக்கிறாராம்.
இந்த எச் என் வாழ்க்கையையே நச்சுன்னு திசை திருப்ப போவுது பாருங்க என்கிறார். தமன்னாவை கவிழ்த்து காசு பார்த்த அந்த பெயரியல் பேராசான் யாரோ, நல்லாயிருக்கட்டும்...!
இந்த எச், கூட சேர்ந்ததில் இருந்தே கோவில் குளம் என்று சுற்ற ஆரம்பித்திருக்கிறாராம் தமன்னா. கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சா கூட குட்டி தூக்கம் போடுற ஆள் நான் இல்ல. பக்கத்துல என்ன கோவில் இருக்கோ, அங்கே கிளம்பிருவேன் என்றார்.
.அஞ்சலி அங்கே தஞ்சமடைஞ்சுருக்கு. தமன்னா இங்கே ஷிப்ட் ஆகியிருக்கு. கோள்களுக்கு மட்டுமல்ல, குயில்களுக்கும் இடம் மாற்றம் நடந்து கொண்டேயிருக்கிறது!


No comments:

Post a Comment

Designed By Blogger Templates