பாலாவின் ஆறாவது படம் இது. மனசுக்குள் ஆறாத படமும் கூட! தமிழ்சினிமாவில் அண்மையில் வெளிவந்த பீரியட் பிலிம்கள் பல வெறும் 'பீரியட்ஸ்' பிலிம் என்ற வகையிலேயே தரம் பிரிக்கப்பட்டு ரசிகர்களின் 'விஸ்பர்' மீது கல்லெறிந்துவிட்டு போயின. ஆனால் பாலா மண்புழுவை பற்றி படமெடுத்தால் கூட, அதிலும் ஒரு அழகிருக்கும். கூடவே அழுகையும் இருக்கும். வழக்கமாகவே பர்ஃபெக்ஷனுக்கு பக்கத்தில் நின்று படம் எடுக்கும் பாலா, தன் முந்தைய சில படங்களில் சறுக்கியும் இருக்கிறார். ஆனால் இந்த படம் எல்லா வகையிலும் ஒசத்திதான்!
1939 களில் நடக்கிற கொத்தடிமைகளின் வாழ்க்கைதான் படம்! ஊரில் கொட்டடித்து திரியும் ஒட்டுப்
பொறுக்கி அதர்வா. அவரை காதலிக்கும் பெண்ணாக வேதிகா. பஞ்சம் தலைவிரித்தாடுகிற கிராமத்தில் கங்காணி ரூபத்தில் வந்து சேர்கிறான் களவாணி ஒருத்தன். 'தேயிலை தோட்டத்துல வேலை. மாசமானா சம்பளம். இருக்கிற வரைக்கும் வேலை பார்த்துட்டு ஊர்ல வந்து காடு கழனின்னு வாங்கி போடு. மிச்சமிருந்தா கூத்தியா வச்சுக்க' என்று ஆசை காட்டியே ஊரிலிருக்கிற பாதி பேரை வளைத்துக் கொண்டு போகிறான். சுமார் 48 நாட்கள் நாவறண்டு போகிற பயணத்தை தாண்டி பசுமையான தேயிலை தோட்டத்துக்கு போனால், இடத்திலிருக்கிற பசுமை அங்கு யார் மனசிலும் இல்லை. கொத்தடிமையாக்கி கொன்று தின்கிறார்கள் இவர்களை. போதாத குறைக்கு வெள்ளைக்காரன் ஆசைப்பட்டால் போச்சு. கற்புக்கும் பிரச்சனை.

தொடரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment