Breaking News

Sunday, 25 November 2012

ஸ்ரேயா,அனுஷ்காவை தொடர்ந்து பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்கும் கவர்ச்சிப்புயல் சார்மி.

ஸ்ரேயா, அனுஷ்கா ஆகியோரைத் தொடர்ந்து அடுத்து சார்மியும் பாலியல் தொழிலாளியாகிறார்… அதாவது அந்த வேடத்தில் நடிக்கப் போகிறார்.
தமிழில் சிம்புவுடன் நடித்து அறிமுகமான சார்மி, தமிழில் பெரிய அளவில் கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கில்தான் அதகளம் செய்து வருகிறார்.
சும்மாவே கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருபவர் சார்மி. இந்த நிலையில் அவரை பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க வைக்கவுள்ளனர் தெலுங்கில்.
சந்து இயக்கம் பிரேமா ஒக்க மைக்கம் என்ற படத்தில் பாலியல் தொழிலாளி வேடமாம் சார்மிக்கு. படத்தில் கால் கேர்ள் ஆக வருகிறாராம் சார்மி.
ராகுல் ஹீரோவாக நடிக்கிறார். ஹைதராபாத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம்.
ஏற்கனவே பவித்ரா படத்தில் ஸ்ரேயாவும், வேதம் படத்தில் அனுஷ்காவும் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த வேதம்தான் தமிழில் வானம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதிலும் அனுஷ்காவே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Designed By Blogger Templates