விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளனர். மோகன்லால் தமிழில் பாப்கார்ன் என்ற படத்திலும், இரு ஆண்டுகளுக்கு முன் வெளியான கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும் நடித்துள்ளார்.
அடுத்து அவர் விஜய்யுடன் கைகோர்க்கிறார். விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.
விஜய் தற்போது இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் – விஜய் படம் தொடங்கும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment