Breaking News

Monday, 8 October 2012

அரை நாள் முழுவதும் தண்ணியில் ஊறிய “ஹன்ஷிகா “…!!


டெக்னாலஜி விஷயத்தில் டிடிஎச் காலத்தில் இருந்தாலும், சென்ட்டிமென்ட் விஷயத்தில் நாம எப்பவுமே ஈயடிச்சான் சேஃப்ட்டிதான் எப்பவும். ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் அதே டைப்பில் படம் எடுத்து ஆளைக் கொல்லுவார்கள் இங்கே.
சண்டை படம் ஹிட்டானால் திரும்புகிற இடமெல்லாம் ட்ஷ்யூம்தான் ஒலிக்கும். தங்கச்சி கதை ஓடினால், அப்புறம் எல்லாருமே டி.ராஜேந்தர்களாகி அழ வைத்தே அலற வைப்பார்கள்.
சரி போகட்டும். விஷயத்துக்கு வருவோம். ஹன்சிகா மோத்வானி ஏர் ஹோஸ்டசாக நடித்த படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி. (அதில் கூட பாராசூட் காமெடி வருமே?) இந்த சென்ட்டிமென்ட்டை அப்படியே கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டார்கள் சேட்டை டீமில்.
ஆர்யாவும் ஹன்சிகா மோத்வானியும் ஜோடியாக நடிக்கும் படத்தில் மோத்வானிக்கு ஏர் ஹோஸ்டஸ் வேடம். ரொம்ப கச்சிதமாக இந்த கேரக்டருக்கு சூட்டாகியிருக்கிறார் அவர். ஆனால் அவரது அழகான ஏர் ஹோஸ்டஸ் சூட்டை அப்படியே கழற்றி ஆணியில் மாட்டி விட்டாராம் டைரக்டர் கண்ணன்.
ஒரு காட்சியில் ஹன்சிகா வழிய வழிய குளிக்கிறாராம். இதற்காக அரை நாள் தண்ணியிலேயே கிடந்தாராம். (இது பாண்டிச்சேரி வாட்டர் இல்லீங்க மக்களே…)

No comments:

Post a Comment

Designed By Blogger Templates