ஜிஸ்ம் 2 படத்தில் நடிப்பதற்கு முன்பு, அப்படத்தில் தான் நெருக்கமாக நடித்த நடிகர்கள் ரந்தீப் ஹூடா மற்றும் அருணோதய் சிங் ஆகியோரின் மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்களை கேட்டாராம்.
ஜிஸ்ம் 2 படம் குப்பைப் படமாகி ரொம்ப நாளாகி விட்டது. படம் படு டப்பா என்றாகி விட்ட நிலையில் அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாவதற்கு ஏகப்பட்ட பந்தாக்களைச் செய்துள்ளாராம் அதன் நாயகி சன்னி லியோன்.
அதாவது படத்தின் ஹீரோக்களான அருணோதய் சிங் மற்றும் ரந்தீப் ஹூடா ஆகியோரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைக் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக படத்தின் இயக்குநரான நடிகை பூஜா பட்டுக்கு இமெயில் அனுப்பி இதுகுறித்துக் கூறியுள்ளார். அதில், நான் நெருக்கமாக நடிக்க வேண்டிய நடிகர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை எனக்குத் தேவை என்று கூறியுள்ளார் சன்னி. மேலும் தனது மருத்துவப் பரிசோதனை அறிக்கையையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த மருத்துவப் பரிசோதனை அறிக்கைக்குக் காரணம், எய்ட்ஸ் நோய் தன்னை தொற்றி விடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வுதான் காரணமாம்.
ஆனால் பாலிவுட்டில் இப்படியெல்லாம் டாக்டர் சர்டிபிகேட் கேட்டு எந்த ஹீரோயினும் பேசியதில்லை என்று சன்னியிடம் கூறினாராம். மேலும் அந்த அளவுக்கு ‘டீப்’பான சீன் ஏதும் படத்தில் இல்லை என்றும் விளக்கியுள்ளார்.
இதையடுத்து சன்னி சமாதானமானதாக தெரிகிறது. எனவே ஹூடா மற்றும் சிங்கின் மருத்துவ சர்டிபிகேட் எதுவும் சன்னிக்குத் தரப்படவில்லையாம்.
ஆபாசப் படங்களில் நடித்துப் பெயர் போனவர் சன்னி. ஆபாசப் படங்களில் கிளைமேக்ஸ் வரை போய் விடுவார்கள். ஜிஸ்ம் படத்தையும் அந்த ரேஞ்சுக்கு நினைத்து சர்டிபிகேட் கேட்டு விட்டார் போல சன்னி.
என்னத்தைச் சொல்ல…!
No comments:
Post a Comment