கவர்ச்சி காட்சிகளுக்கு மறுப்பு சொல்லாமல் நடித்தார் சார்மி. சஸ்பென்ஸ், ஆக்ரோஷம், கவர்ச்சி கலந்த வேடத்தில் சார்மி நடித்துள்ள படம் ‘சிவாங்கி.
இது பற்றி பட இயக்குனர் ஓஷோ துளசிராம் கூறியதாவது:
டோலிவுட்டில் ‘மந்த்ரா என்ற படத்தையடுத்து ‘மங்களா என்ற படம் இயக்கினேன். இப்படம் தமிழில் ‘சிவாங்கி என்ற பெயரில் வெளியாக உள்ளது. காதல், ஆக்ஷன், த்ரில்லர் மூன்று அம்சங்களும் கலந்த கதை. ஹீரோயின் சார்மி. நடிகையாகவே வேடமேற்றிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் மந்திரம், தந்திரம், ஆன்மிகம் என கனமாக கதை பின்னப்பட்டிருப் பதால் முதல்பாதியில் ஜாலியாக காட்சிகள் அமைக்கப்பட்டன.
பாடல் காட்சிகளில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும். கவர்ச்சி உடையில் கிக்கான நடன அசைவுகளுடன் நடிக்க வேண்டும் என்றபோது சார்மி ஒப்புக்கொண்டார். இதனால் காட்சிகள் இளசுகளை கவரும் வகையில் படமாக்கப்பட்டது. ‘ஐஸ் ஐஸ் என்ற பாடல் பேசப்படும்.
துணிச்சலான சண்டை காட்சிகளிலும் சார்மி நடித்துள்ளார். இதன் பெரும்பகுதி ஷூட்டிங் ஐதராபாத் அடுத்துள்ள விக்காரபாத் என்ற அடர்ந்த காட்டுபகுதியில் நடந்தது. இசை விஸ்வா. வசனம் ஏ.ஆர்.கே.ராஜராஜன். நாகேஸ்வர் ரெட்டி தயாரிப்பு. இவ்வாறு ஓஷோ துளசிராம் கூறினார்.
No comments:
Post a Comment