
என்னாது... இந்திரா காந்தி செத்துட்டாங்களா? -நாட்டு நடப்பை தெரிந்து கொள்கிற விஷயத்தில் பல நடிகர் நடிகைகளுக்கு இப்படிதான் இருக்கிறது 'மைண்டும் இன் புட்'டும்! காங்கிரசுக்கு ஆதரவா பேசுனா கைய நீட்டுறது. கழகத்துக்கு ஆதரவுன்னா விரலை காட்டுறது என்று அதை தாண்டிய அரசியல் அறிவையும் வளர்த்துக் கொள்ள விரும்புவதில்லை பலர். (குஷ்பு மாதிரி கொஞ்ச பேருக்கு மட்டும் கொல தள்ளி நிக்குது அரசியல் அறிவு) அதை விடுங்க... நாம சொல்லப் போறது அரசியல் செய்தியல்ல. ரிச்சாவின் ட்விட் பற்றிய அதிர்ச்சி மட்டும்தான்.
ரெண்டாம்ப்புல முக்கிய பாடமா 'டைட்டானிக்' படத்தையே வைக்கலாமேங்கிற அளவுக்கு தொப்பம் பட்டி, தோலார் பட்டி வரைக்கும் டிராவல் பண்ணிய படம் டைட்டானிக். இந்த படத்தை இப்போதுதான் பார்த்தாராம் ரிச்சா.
சமீபத்தில் அந்த படத்தை பார்த்து சிலிர்த்து போயிட்டேன் என்று ட்விட் செய்திருக்கிறார் அவர். ஒஸ்தி படத்துல சிம்புவோட நடிச்ச ஆறு மாசத்துல ஒரு தடவ கூடவா அவர் கப்பலை காட்டல?
No comments:
Post a Comment