ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடிக்கக்கூடாது. அதற்கு நான் எதிரி‘ என்றார் மீரா நந்தன். ‘வால்மீகி’, ‘அய்யனார்’, ‘சூர்ய நகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மீரா நந்தன்.
அவர் கூறியதாவது:
சமீபத்தில் மலையாள படம் ‘கரோத்பதி’ ஷூட்டிங்கிற்காக மைசூர் சென்றிருந்தேன். இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். எந்நேரமும் குடும்பத்தினர் ஞாபகமாகவே இருக்கும் யதார்த்தமான பாத்திரம்.
தென்னிந்திய படங்களை பொறுத்தவரை ஒரு மொழிக்கும் மற்றொரு மொழியில் நடிப்பதற்கும் வித்தியாசம் இல்லை. தமிழ், தெலுங்கு படங்களில் தொழில் ரீதியாக பணிக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
அதேசமயம் மலையாள படங்களில் நடிப்பதையும் ரசனையுடன் ஏற்றிருக்கிறேன். காரணம் மலையாளம் எனது தாய் மொழி. மலையாளம், கன்னடம் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதால் கன்னட மொழியை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.
என்னுடைய படங்களை தேர்வு செய்யும்போது ஸ்கிரிப்ட் நன்றாக இருக்கிறதா, நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்த்துத்தான் ஒப்புக்கொள்கிறேன். கவர்ச்சிக்கு நான் எதிரி. நானும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். மற்ற ஹீரோயின்கள் நடித்தாலும் பிடிக்காது. இவ்வாறு மீரா நந்தன் கூறினார்.
No comments:
Post a Comment