Breaking News

Tuesday, 18 September 2012

கர்ப்பமான பின்பு திருமணம் செய்து கொண்ட பிரபல ஜோடிகள் …!


பழம்பெரும் நடிகர் திலீப்குமாரின் தம்பி மகன் அïப்கான். இவர் இந்தி திரை உலகின் அழகான கதாநாயகன். `ஜோகி டாகூர்’ என்ற டெலிவிஷன் கதாபாத்திரத்தில் நடித்தது மூலம், பெண்களின் மனதுக்குப் பிடித்த கதாநாயகனாக மாறிவிட்டார்.
இவர் “டர்ட்டி பிக்சர்” படத்திற்கு உடைகள் வடிவமைத்து தேசிய விருது பெற்ற நிஹாரிகா கானை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த ஜோடியின் காதல் அனுபவங்கள் ருசிகரமானது. அதைப் பற்றி அïப்கான் மனந்திறக்கிறார்..
`ஜோகி டாகூர்’ கதாபாத்திரம் உங்கள் செல்வாக்கை ரசிகர்கள் மத்தியில் உயர்த்த என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
“இரண்டு பெண்களிடம் அன்புகாட்டும் நல்ல அப்பா வேடம். அதனால் நானும் அனுபவித்து நடிக்கிறேன். தொடரில் ஒரு கட்டத்தில், யாரென்றே தெரியாத ஒரு குழந்தையின் வரவால் அனைவரின் சந்தேகப் பார்வைக்கு ஆளாகிறேன். அந்நிலையிலும் குழந்தையை கைவிடாத பண்பு என் கதாபாத்திரத்தின் இமேஜை உயர்த்துகிறது”
நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு, ஒரு குழந்தை வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?
“நிஜம் வேறு -டெலிவிஷன் கதை வேறு என்று பிரிப்பது தவறு. மனித வாழ்க்கைதான் கதையாகிறது. இப்படி ஒரு சூழ்நிலை என் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்டால் இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொள்வேன்”
உங்கள் பெரியப்பா திலீப்குமாரிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
“அவர் சர்வதேச புகழ்பெற்ற நடிகரான பின்பும் தன்னிடம் பணிபுரியும் சாதாரண ஊழியரிடம்கூட பண்போடு பழகுவார். அந்த மரியாதையையும், ஆழ்ந்த தேச பற்றையும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்”
உங்கள் மனைவி நிஹாரிகா திருமணத்தில் நம்பிக்கை இல்லாதவர். அவர் எப்படி உங்கள் காதலை ஏற்றார்?
“அதற்கு என்னுடைய விடா முயற்சி தான் காரணம். முதன் முதலில் அவருக்கு காதல் கவிதையோடு `பொக்கே’ கொடுத்தேன். விதவிதமான 60 வகையான வண்ண மலர்களை நானே தேடியெடுத்து வடிவமைத்ததால் அதை எப்படியாவது ஏற்றுக்கொள்வார் என்று நம்பினேன். அவர் மலர்களை ஏற்றுக் கொண்டு கவிதையை தூக்கி எறிந்துவிட்டார். பிறகு ஒருவழியாக காதலை ஏற்று திருமணத்திற்கு சம்மதித்தார். அது ஒரு பெரிய கதைதான்..”
அந்த பெரிய கதையில் கொஞ்சம் சொல்லுங்களேன்?
“காதலுக்கு சம்மதம் தெரிவித்த அவர், பின்பு திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. எட்டு மாத கர்ப்பத்திற்கு பிறகு தான் எங்கள் திருமணம் நடந்தது. குழந்தையின் சமூக அந்தஸ்தை காப்பாற்ற திருமணம் செய்து கொண்டார்”
அழகான நடிகைகளுக்கு அற்புதமான உடை வடிவமைக்கும் உங்கள் மனைவியை, எந்த உடையில் பார்க்க ஆசைப்படுவீர்கள்?
“புடவையில்தான் என் மனைவி பேரழகு. புடவைகட்டி அவர் நடந்தால் அந்த அழகே தனி. பார்த்துக்கொண்டே இருக்கலாம்..”
மனைவியின் சமையலில் உங்களுக்கு பிடித்த உணவு?
“என் மனைவி நன்றாக சமைப்பார். ஆனால் எனக்கு இந்திய உணவு வகை தான் பிடிக்கும். அதனால் அம்மா செய்யும் ஆலு பரோட்டா போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவேன்”
உங்கள் குழந்தைகளை எப்படி கவனித்துக் கொள்கிறீர்கள்?
“அவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். எங்கள் வீட்டில் வேலையாட்களும் இருக்கிறார்கள். ஆனாலும் எங்கள் இருவர் கவனமும் குழந்தைகள் மீது எப்போதும் இருக்கும்”
உங்கள் குழந்தைகள் எந்த விதத்தில் அதிர்ஷ்டசாலிகள் என்று கருதுகிறீர்கள்?
“எங்கள் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டம் ஒன்றும் தேவையில்லை. மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அவர்களுக்கு கிடைத்தால் போதுமானது. எங்கள் இருவராலும் அவர்களை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடிவதில்லை. மற்ற குழந்தை களுடன் விளையாடும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லாமல் போய் விட்டதால் அவர்களை நல்ல ஹாஸ்டலில் சேர்த்துவிடலாமா என்று கூட சிந்திக்க வேண்டி இருக்கிறது”
கோபத்தை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?
“எனக்கு கோபம் வரும். ஆனால் உடனே அமைதியாகிவிடுவேன். மவுனத்திற்கு இருக்கும் பலம் கத்துவதிலும், ஆவேசப்படுவதிலும் இல்லை. நமது கோபத்திற்கு எதிரிகள் உண்டு. ஆனால் நமது மவுனத்திற்கு எதிரிகள் கிடையாது. மவுனத்தின் மூலம் அனைவரையும் கட்டுப்படுத்தலாம் என்று என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்”
நிஹாரிகாவுடனான உங்கள் உறவை பாதுகாக்கும் தூண் எது என்று நினைக்கிறீர்கள்?
“நம்பிக்கை, மரியாதை ஆகிய இரண்டும்தான் எங்கள் குடும்ப வாழ்க்கையை பாதுகாக்கும் தூண்கள். அவை இரண்டும் இல்லாமல் அன்பு முழுமை பெறுவதில்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள். அன்பு, எங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் களைந்துவிட்டது” என்கிறார், அïப்கான்.
இனி அவரது மனைவி நிஹாரிகாவிடம் சில கேள்விகள்:
உங்களுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்? திருமணத்தில் இருக்கும் குறையாக எதை சொல்கிறீர்கள்?
“திருமணத்தில் எந்த குறையும் இல்லை. நான் திருமணத்தை வெறுக்கவுமில்லை. என்னு டைய வேகமான வளர்ச்சிக்கு திருமணம் ஒரு தடையாக இருக்கும் என்று நினைத்தேன். உண்மையான தாம்பத்ய வாழ்க்கைக்கு திருமணம் தேவையில்லை என்பது என் கருத்து. எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த வகையில் பெண்களின் திறமைகளை அடிமைப்படுத்தும் சடங்காகவே திருமணம் இருக்கிறது”
கணவர் உங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறாரா?
“இல்லை. நான் இன்றும் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் தேசிய விருது பெற முடிந்தது. இது என் கணவரின் அன்பிற்கு கிடைத்த விருது”
தேசிய விருது பெறும் அளவுக்கு அப்படி என்ன புதுமை உங்கள் உடையலங்காரத்தில் உள்ளது?
“உடை ஒரு விசித்திரமான விஷயம். ஒருவருக்கு அழகாக தோன்றும் உடை மற்றவருக்கு பொருந்தாமலும் போகலாம். ஆக புதுமை என்பது உடை வடிவமைப்பில் இல்லை. அணிந்துக் கொள்பவரின் தோற்றத்தில் தான் உள்ளது. அணிந்து கொள்பவருக்கு ஏற்றபடி ஆராய்ந்து செய்தால்தான் உடை வடிவமைப்பு வெற்றி பெறும்”

No comments:

Post a Comment

Designed By Blogger Templates