Breaking News

Monday, 10 September 2012

அடுத்து அடுத்து லக்ஷ்மி ராய்க்கு வரும் சோதனை ..!


நடிகைகளுக்குள் நடக்கிற போட்டியில் பெரும்பாலும் மண்ணை கவ்வுவதுலட்சுமிராயாகதான் இருக்கும்.இத்தனைக்கும் தொட்டுக்கோ என்றால்கட்டிக்கிற டைப்தான் அவர். இருந்தாலும் ஏன்? அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கெதுக்கு? இது லேட்டஸ்ட் தகவல்.
நாகார்ஜுனாவின் படத்தில் ஒரு ஐட்டம் டான்சுக்கு அழைத்திருந்தார்களாம் இவரை.
சம்பள பேச்சு வார்த்தைகள் எல்லாம் முடிந்து அட்வான்சுக்காக காத்திருந்தார் லட்சுமி. ஆனால் வந்தது லட்சுமியல்ல, லட்சுமி வெடி.
சென்ட்டிமென்ட்டாகவே நாகார்ஜுனா படங்களின் ஐட்டம் டான்சுகளை சார்மிதான் ஆடுவார். இந்த படத்தில் எதற்கு மாற்றணும் என்று நினைத்தாராம் நாகு. சார்மியே இருக்கட்டும் என்று அவர் சொல்லிவிட்டதால், ஐட்டம் டான்ஸ் வாய்ப்பு அம்பேல்.
தமிழிலும் தனது வாய்ப்புகளை பிடுங்கிய ஒன்றிரண்டு நடிகைகளை திட்டி திட்டி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் லட்சுமிராய். இப்போது தெலுங்கிலும் ஒரு மூச் அலறணும்.
ஐயோ பாவம் அவருக்குதான் எத்தனை எத்தனை மூக்குடைப்பு?

No comments:

Post a Comment

Designed By Blogger Templates