‘இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? என்றதற்கு பதில் அளித்தார் திவ்யா.வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் திவ்யா.
கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சீனியர் நடிகர்களுடன் நடித்து வந்த திவ்யா, சமீபகாலமாக இளம் கன்னட ஹீரோக்களான ஸ்ரீனாகார கிட்டி, விஜய், யோகிஷ், யாஷ் மற்றும் திக்நாத் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
கோடி ராமகிருஷ்ணா இயக்கும் தில் கா ராஜா படத்தில் திக்நாத் ஜோடியாக நடிக்கிறேன். இதில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு ஸ்கிரிப்ட் என்னை
கவர்ந்ததுதான் காரணம். மாறுபட்ட வேடம்.
சமீப காலமாக நான் நடித்த சில வேடங்கள் கண்ணீர் சிந்துவதும், கனமான நடிப்பும் கொண்டதாக அமைந்திருந்தது. அதிலிருந்து மாறுபட்டதாக இவ்வேடம் அமைந்திருக்கிறது.
‘இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது ஏன்? என்கிறார்கள்.
அப்படியில்லை சீனியர் ஹீரோக்கள் சுதீப்புடன் 4 படம், புனித் ராஜ்குமார், உபேந்திரா ஆகியோருடன் தலா 3 படம்., தர்ஷனுடன் ஒரு படம் என நடித்திருக்கிறேன். இளம் ஹீரோக்களுடன் நடிக்கும்போது பரிசோதனையான கேரக்டர்கள் கிடைக்கிறது.
அதனால்தான் தொடர்ந்து இளம் ஹீரோக்களுடன் நடிக்கிறேன் என்றார் .
No comments:
Post a Comment