Breaking News

Friday, 14 September 2012

கட்டியணைக்கப் முயன்ற பிரபல இயக்குநர்…!நைசாக நழுவிய நமீதா!


டிவி சீரியல்கள் எடுத்து வெற்றி கண்ட கையோடு சினிமா எடுக்க வந்த இயக்குநர் அவர். ஓரிரு படங்கள் எடுத்தார். ஒன்றும் வெற்றியடையவில்லை.ஆனாலும் வெற்று ஜம்பத்துக்கும் நடிகைகளை உண்டு இல்லை என பாடாய் படுத்துவதிலும் அவர் பலே ஆசாமி.
எந்த நடிகையாக இருந்தாலும் எடுத்த எடுப்பில் இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தர வேண்டுமாம். எதுக்கு அது என்றால்.. நான் காலை வணக்கம் சொல்லும் முறையே இதுதான் என்பாராம். படப்பிடிப்பு முடியும்போதும் இப்படி இறுக்கி அணைக்கும் படலம் உண்டாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் ஒரு படத்தை ஆரம்பித்தார். வாய்ப்பு உள்ள, வாய்தா போன நடிகைகள் 9 பேரை கதாநாயகி என அறிவித்துவிட்டார்.
அவர்களில் ஒருவர் நமீதா. உப்புமா கம்பெனி என்றாலும், அவசரத்துக்கு உப்புமாவும் பரவாயில்லை என்று நடிக்க ஒப்புக் கொண்டார்.
படப்பிடிப்புக்கு செல்லும் போதுதான், அவர் காதில் இயக்குநரின் ‘இறுக்கியணைச்சு உம்ம தரு’ மேட்டரை சொன்னார்களாம்.
அப்படியா சங்கதி என்று கேட்டுக் கொண்ட ஆறடி உயர அம்மணி, செட்டுக்குள் நுழைந்திருக்கிறார். ஹலோ நமீதா டியர் என்று உரக்கச் சொன்னபடி அனைவர் முன்னிலையிலும் கட்டிப்பிடிக்க இயக்குநர் ஓடி வர, நமீதா சட்டென்று இரண்டடி பின் வாங்கி ‘வணக்கம் பிரதர்’ என்று போட்டாராம் ஒரு போடு!
செம ஷாக்காகிப் போன டைரடக்கர், ‘யாரோ செம்மையா போட்டுக் கொடுத்திருக்காங்கப்பா… கட்டிப்புடிக்கலன்னாலும் பரவால்ல.. வாய்க்கு வாய் மச்சான்ஸ் மச்சான்ஸ்னு கூப்புடற அந்தப் பொண்ணு புதுசா பிரதர்னு சொல்லிடுச்சே…!” என்று இரவு முழுக்க புலம்பிக் கொண்டிருந்தாராம்!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates