Breaking News

Monday, 17 September 2012

இப்பத்தான் ஹனிமூன் போயிட்டுவந்தாராம் செல்வராகவன்........


உலகின் விசித்திரமான பேர்வழிகள் 100 பேர் கொண்ட பட்டியல் தயாரித்தால் அதில் தமிழ் சினிமாக்காரர்கள் கண்டிப்பாக 90 பேராவது இடம் பெறுவார்கள். அவர்களின் உலகம் ‘இரண்டாம் உலகத்தில் துவங்கி ‘ஏழாம் உலகம்’ வரை நீடித்துக்கொண்டு போகும்.
செப்டம்பர் 2010 ல் திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தையையும் பெற்று,  அந்தக்குழந்தைக்கு லீலாவதி என்று பெயரும் வைத்தபிறகு, தற்போதுதான் ஹனிமூன் கொண்டாடிவிட்டு திரும்பினராம் இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலி தம்பதியினர்.
இதுபற்றி மேற்படி இருவரும் ட்விட்டரில் மாறிமாறி சிலாகித்த விபரங்கள் வருமாறு:
செ: திருமணம் முடிந்த சமயத்திலிருந்தே ‘இரண்டாம் உல்கம்’ சப்ஜெக்டில் தீவிரமாக மூழ்கிவிட்டேன். மனைவியுடன் உல்லாசமாக இருக்க நேரமே ஒதுக்கமுடியவில்லை. இடையில் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பின் நீண்ட ஷெட்யூலுக்காக ஜார்ஜியாவில் இருந்தபோது, மனைவியையும், எனது மகளையும் அநியாயத்துக்கு மிஸ் பண்ணினேன்.
ஷூட்டிங் முடிந்து திரும்பி வந்தவுடன், கீதாஞ்சலியிடம் நாம் எங்கேயாவது ஹனிமூன் போகலாம், எங்கே போகலாம் என்று முடிவு செய்து சொல் என்றேன்’’
கீ: ‘’ செல்வா ஜார்ஜியாவில் இருந்தபோது நானும் அவரை ரொம்பவே மிஸ் பண்ணினேன். அவர் ஹனிமூன் போகலாம் என்றவுடன் இணையதளங்களில் தேடி,அங்குள்ள தாஜ் லேக் பாலஸ் ஓட்டலில் தங்குவதற்காகவே, கடைசியில் உதய்பூரை தேர்ந்தெடுத்தேன்.
அந்த உல்லாசப்பயணம் இனிமையிலும் இனிமையாக இருந்தது. செல்வா என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியாமல் இருந்தார். இருவரும் சேர்ந்து கடைவீதிகள் முழுக்க சுற்றித் திரிந்தது மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார் கீதாஞ்சலி.
இந்த தாஜ் லேக் பேலஸ் ஒரு பெரிய ஏரியின் நடுவில் கட்டப்பட்டுள்ளது.
அப்ப அடுத்த படத்துல உதய்பூருக்கு ஒரு ரோல் இருக்குன்னு சொல்லுங்க.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates