Breaking News

Monday, 10 September 2012

பாகன் விமர்சனம்...

இதுநாள் வரை காதல் நாயகனாக வலம் வந்த "ரோஜாக்கூட்டம்" ஸ்ரீகாந்த் முதன்முதலாக காமெடி நாயகனாக களம் இறங்கி கலக்கி இருக்கும் படம் தான் "பாகன்."

கதைப்பபடி ஒரு ஓட்டை சைக்கிள் அதன் பாகனைப்பற்றி அதாங்க, அந்த சைக்கிளின் முதலாளி பற்றியும், அவனது கைராசி பற்றியும், காதல் பற்றியும் கூறும் காமெடி ப்ளாஷ்பேக் தான் "பாகன்" படம் மொத்தமும்! பொள்ளாச்சி பக்கம் ஏழை சோடா வியாபாரியின் மகன் சுப்பிரமணி எனும் ஸ்ரீகாந்த்துக்கு எப்படியாவது பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என்பது ஆசை. அதற்காக நண்பர்கள் "பரோட்டா சூரி, "குண்டு பாண்டி உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னென்னவோ தொழில்களை தொடங்கியும், "தொட்டதில் எல்லாம் பட்டது கடன் மட்டுமே..." எனும் ரீதியில் படுநஷ்டமும், கஷ்டமும் அடைகிறார். ஒரு வழியாக இதற்கு ஒரே தீர்வு வசதியான வீட்டுப் பெண்ணை காதலித்து கரம் பிடிப்பது தான்... என்று ஐடியா கண்டுபிடிக்கும் ஸ்ரீ, அதன்படியே பொள்ளாச்சியிலே பெரும் கோடீஸ்வரர் மாணிக்கம் கவுண்டரின் ஒரே மகள் மகாலட்சுமி எனும் ஜனனி ஐயருக்கு ரூட் போடுகிறார்.

சின்ன வயது முதலே ஸ்ரீ, மீது காதல் கொண்டு கனவில் மிதந்து வரும் ஜனனியும், ஸ்ரீயின் லவ்வுக்கு டபுள் ஓ.கே. சொல்லி, ஒரு இராத்திரி உடுத்திய சுடிதாரும், படிக்க எடுத்துப்போன புத்தகமும் கையுமாக ஸ்ரீயின் வீட்டு வாயிலில் நிற்கிறார். பதறிப்போகும் ஸ்ரீ-யோ நான் உன்னை காதலிக்கவில்லை... உன் பணத்தை தான காதலித்தேன்... இப்படி வெறுங்கையோடு வந்து நின்னா எப்படி? எனக்கேட்டு ஜனனியை துரத்தி அடிக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன..? ஸ்ரீ - ஜனனி மீண்டும் சேர்ந்தார்களா...? இல்லையா...? எனும் மீதிக்கதையுடன் ஸ்ரீயின் மிதிவண்டியின் உருக்கமான கதையையும் கலந்துகட்டி கலர்புல்லாகவும், காமெடியாகவும் கதை சொல்லி பாகனை வெற்றி எனும் யானை மீது ஏற்றி இருக்கிறார் இயக்குநர் அஸ்லாம்!

இயக்குநர் சொன்னதை தன் பாணியில் காமெடியாக செய்து, ஸ்ரீக்கு காமெடி வருமா...? எனும் நம் சந்தேகத்தை, சீன் பை சீன் தகர்த்தெறிந்து தனக்கு காதலுடன் காமெடியும் வரும் என்பதை நிரூபித்திருக்கிறார். ஹீரோ ஸ்ரீகாந்த்!

ஸ்ரீ மாதிரியே நாயகி ஜனனியும் நல்ல நடிப்பில் "நச் என்று முத்திரை பதித்து இருக்கிறார். பரோட்டா சூரி, குண்டு பாண்டி, முத்துக்காளை உள்ளிட்டவர்கள் இந்தப்படத்தில் தான் மெய்யாலுமே காமெடி பண்ணி சிரிக்க வைக்கின்றனர் பலே! ஸ்ரீயின் அம்மாவாக கோவை சரளா, ஜனனியின் அப்பாவாக இயக்குநர் கம் நடிகர் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டவர்களும் தங்கள் பங்கை சரியாக செய்து பாகனை தூக்கி நிறுத்தியிருக்கின்றனர். பலே! பலே!!

‌ஜேம்ஸ் வசந்தனின் இனிய இசையும், புதுமுக ஒளிப்பதிவாளரின் அழகிய ஒளிப்பதிவும், இயக்குநர் அஸ்லமின் இயக்கத்திற்கு பக்க துணையாக இருந்து பாகனை, யோகன் ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!

ஆக மொத்தத்தில் "பாகன்" - "யோகன்"

No comments:

Post a Comment

Designed By Blogger Templates