காஜல் அகர்வாலிடம் யாராவது நீங்கள் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று சொன்னால் இன்னொரு வாட்டி சொல்லுங்க என்கிறாராம். மேலும் அவர்களுக்கு விருந்து கொடுக்கிறாராம்.
காஜல் அகர்வால் தமிழில் விஜயுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் காஜல் தமிழ், தெலுங்கு என்று இத்தனை படங்களில் நடித்து வரும் நீங்கள் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று பலரும் அவருக்கு ஐஸ் வைத்து வருகிறார்களாம்.
இதைக் கேட்டு உச்சி குளிர்ந்து போகும் காஜல் அந்த ஐஸ் பார்டிகளிடம் இன்னொரு வாட்டி சொல்லுங்க என்று கேட்கிறாராம். அவர்களும் அதை திரும்பச் சொல்ல மகிழ்ந்துபோகும் அவர் ஐஸ்
பார்ட்டிகளுக்கு விருந்து கொடுத்து அசத்துகிறாராம்.
இத்தனை படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள காஜல் கால்ஷீட்டை குழப்பியதாக சிலர் முணுமுணுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கும், இங்கும் ஓடி, ஓடி நடிப்பதால் சில படங்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க காலதாமதமாவதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment