Breaking News

Friday, 7 September 2012

நடிகை,நடிகர்களின் ஆபாசப் படத்தை கிராபிக்சில் தயாரித்து மிரட்டியவர் கைது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சாயாஜி ஷிண்டே. இவர் தூய், பாரதி, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்பட பல்வேறு தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் விஜய் சாணக்யா. இவருக்கு தெலுங்கு திரையுகில் ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.
இவர் தெலுங்கு நடிகர், நடிகைகளை உல்லாசமாக இருப்பது போல் கிராபிக்ஸ் படம் தயாரிப்பவர். பின்னர் அந்த நடிகர், நடிகைகளிடம் கிராபிக்ஸ் ஆபாச படத்தை காட்டி பணம் பறிப்பார்.
இதேபோல் நடிகர் சாயாஜி ஷிண்டேவிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். இதற்காக அவர் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போல் கிராபிக்ஸ் வீடியோ படம் தயாரித்தார்.
பின்னர் சாயாஜி ஷிண்டேவை போனில் தொடர்பு கொண்டு நீங்கள் நட்சத்திர ஓட்டலில் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ படம் உள்ளது.
அதை நான் உங்கள் மனைவிக்கு அனுப்பினால் நிலைமை என்னாகும். எனக்கு ரூ.15 லட்சம் தந்தால் அந்த வீடியோ படத்தை உங்களிடம் தந்து விடுகிறேன் என்று மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாயாஜி ஷிண்டே பஞ்சாராஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்போன் நம்பரை வைத்து விஜய் சாணக்யாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் ஆபாச சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கிராபிக்ஸ் ஆபாச படம் தயாரித்து ஒரு கவர்ச்சி நடிகை மற்றும் சில நடிகர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பறித்தது தெரிய வந்தது.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates