Breaking News

Wednesday, 12 September 2012

த்ரிஷாவும் காதலரும் பார்ட்டியில் தனியாக நெருக்கம்- படங்களை வெளியிட்ட பத்திரிகை.


திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் சமீபத்தில் நடந்த விருந்தில் பங்கேற்றனர். இருவரும் தனிமையில் நெருக்கமாக அமர்ந்தபடி பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததை தெலுங்கு பத்திரிகைகள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.
ராணாவுக்கும் த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிச்சயதார்த்தத்தில், த்ரிஷாவுக்கு ராணா மோதிரம் அணிவித்தாராம். ஆனால் த்ரிஷா இதை மறுத்ததோடு, நாங்க இன்னும் ப்ரெண்ட்ஸ்தான் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து கொஞ்சிக் கொண்டிருந்தார்களாம்.
இந்த விருந்துக்கு திரிஷாவும், ராணாவும் ஒரே காரில் ஜோடியாக வந்தார்கள். வந்ததும் ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு, தனியாகப் போய் கட்டி அணைத்தபடி உட்கார்ந்து பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
விருந்துக்கு வந்தவர்கள், இந்த ஜோடியின் நெருக்கத்தைப் பார்த்து, அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பினார்களாம்!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates