Breaking News

Sunday, 16 September 2012

த்ரிஷாவிற்கும் ராணாவிற்கும் நிச்சயதார்த்தம்?


கோலிவுட், டோலிவுட் என இரண்டு திரையுலகிலும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு செய்தி த்ரிஷா-ராணா நிச்சயதார்த்தம் நடந்ததா?என்பது தான். பல நாட்களாக காதல் என பேசப்பட்டு வந்த த்ரிஷா-ராணாவின் பழக்கம் திடீரென மோதலால் பிரிந்தது. எவ்வளவு வேகத்தில் பிரிந்தார்களோ அதைவிட வேகமாக மறுபடியும் ஒட்டிக்கொண்டனர் ராணாவும் த்ரிஷாவும்.
‘எங்களுக்குள் காதல் இல்லை’ என இவர்கள் மறுத்ததால், காதல் என்ற செய்தி இப்போது நிச்சயதார்த்தமாகிவிட்டது. சமீபத்தில் ராணா-த்ரிஷா உறவினர்களின் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பிளாட்டின மோதிரத்தை ராணா, த்ரிஷாவிற்கு அணிவித்ததுடன் ஒரு காஸ்ட்லியான நகைப்பெட்டியையும் கொடுத்தார் என்பது தான் அந்த செய்தி.
இதுபற்றி கேட்டபோது த்ரிஷா “எனக்கு ராணாவை திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை எனும்போது நிச்சயதார்த்தம் நடந்ததா எனக் கேட்டால் என்ன அர்த்தம்?’ என கொதிக்கிறார். ராணாவுக்கு 500 கோடி ரூபாய் சொத்து, த்ரிஷா எதிர்பார்த்த மாதிரியான மணமகன், நீண்ட நாள் பழக்கம் என பல செய்திகள் வந்தாலும் த்ரிஷா வாய் திறந்து சொன்னால் தான் உண்மை தெரியவரும்.
த்ரிஷா இப்போது தோழிகளுடன் கொண்டாட்டத்திலும், பூலோகம் படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருக்கிறார்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates