Breaking News

Monday, 24 September 2012

குடும்ப பாங்கு இனி வேண்டாம் ..கவர்ச்சிதான் வேண்டும்..! நடிகையின் சபதம்..!


‘தமிழ் படங்கள் கைகொடுக்கவில்லை. கன்னட படம்தான் இப்போது என்னை வாழ வைக்கிறது என்றார் பாமா.மலையாள படவுலகிலிருந்து வந்த அசின், நயன்தாராஉள்ளிட்ட பல நடிகைகள் தமிழ் படங்களில் டாப் இடத்தை பிடித்துள்ளனர். மலையாளத்திலிருந்து வந்து தமிழில் ‘சேவற்கொடி, ‘எல்லாம் அவன் செயல் போன்ற படங்களில் நடித்தவர் பாமா. ஆனால் இவருக்கு கோலிவுட் கைகொடுக்கவில்லை. தற்போது கன்னடத்தில் டாப் நடிகைகளுக்கு போட்டி நடிகையாகிவிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கோலிவுட் படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் அடியெடுத்து வைத்தேன். ஆனால் அதில் ஏமாற்றம் மிஞ்சியது. மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்தினேன். இந்நிலையில் கன்னடத்தில் வந்த வாய்ப்பை ஏற்று நடித்தேன். அது எனக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
மலையாளத்தில் எப்படி முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் எனக்கு கிடைத்ததோ அதுபோல் கன்னடத்தில் இப்போது முக்கிய வேடங்களில் நடிக்கிறேன். தற்போது ஆட்டோ ராஜா என்ற படத்தில் நடிக்கிறேன். இது எனது 7வது படம்.
மலையாள படங்கள் எனக்கு எப்படி நம்பிக்கையூட்டியதோ அதுபோல் கன்னட படங்கள் நம்பிக்கை ஊட்டி இருக்கிறது. மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு கன்னடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் நான் அனுபவபூர்வமாக உணர்கிறேன். இதுவரை குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தேன். இனி கவர்ச்சியாக நடிக்கவும் துணிந்துவிட்டேன். இவ்வாறு பாமா கூறினார்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates