Breaking News

Thursday, 13 September 2012

மேலாடையின்றி ந‌டிக்கும் மிதுனா??????


சின்னத்திரை தொடரில் நடிகை மிதுனா ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறார். மாமதுரை படத்தின் மூலம் நாயகியாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மிதுனா. இவர் கருத்தம்மா ராஜஸ்ரீயின் தங்கை. சினிமா வாய்ப்பு இல்லாததால் திரையுலகில் இருந்து விலகியிருந்த மிதுனா சின்னத்திரை தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார். சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் காதம்பரி மெகா தொடரின் நாயகியாக நடிக்கும் இவருடன், அத்தொடரில் சுதா சந்திரன், லட்சுமி ராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடிக்கிறார்கள்.
 சின்னத்திரை அனுபவம் குறித்து மிதுனா அளித்துள்ள பேட்டியில், காதம்பரி தொடர் அந்த காலத்தையும், இந்த காலத்தையும் இணைக்கும் கதை. 200 ஆண்டுகளுக்கு பிறகு மறுஜென்மம் எடுத்து சந்திக்கும் காதம்பரியின் வாழ்க்கை சம்பவம். 2 கதாபாத்திரத்திலும் நான்தான் நடிக்கிறேன். அதிலும் அந்த காலத்து வேடத்துக்காக நான் ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி, கொண்டை போட்டு, அந்த கால நகைகளை மாட்டிக்கொண்டு நடிப்பது புது அனுபவம்தான். இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள் என தோன்றுகிறது, என்றார்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates