வடிவேலுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததும் அவருடைய இடத்தைப்பிடிக்க ஆளாளுக்கு போட்டி போடுகிறார்கள்.யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் அந்தப் போட்டியில், குண்டு பப்ளிமாஸ் நடிகை ஹன்ஸிகா மோத்வாணியும் போட்டிபோடுகிறார்.
ஹன்ஸிகா வடிவேலுவை வம்பிழுக்கும் அந்தப்படத்தின் பெயர் ‘வேட்டை மன்னன்’. படத்தோட பேர் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்குமே?
அதாங்க நம்ம வம்புத்தம்பி சிம்பு, நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்காக இயக்கி, நடிச்சிட்டிருக்க படம் . படத்துல மொத்தம் மூனு ஹீரோயினுங்க. ஹன்ஸிகா, தீக்ஸா ஷேத்,டாப்ஸி.
மத்த ரெண்டு பேரும் சிம்புவை லவ் பண்ற சாஃப்டான பொண்ணுங்களா நடிக்க, நம்ம ஹன்ஸிகா மட்டும் டெர்ரான கேங்ஸ்டரா நடிக்கிறாங்களாம்.
‘’ படத்துல என் கையில துப்பாக்கி இல்லாத சீன் கிடையாது. என்னப் பாத்தாலே தியேட்டர்ல இருக்க மொத்த ஜனங்களும் பீதியாகி, பேதியாகுற அளவுக்கு டெர்ரரா நடிச்சிருக்கென். எவ்வளவு நாளைக்குத்தான் இந்த ஹீரோ பசங்களோட டூயட் ஆடிட்டே இருக்குறதுன்னு நான் குமுறிக்கிட்டிருந்தப்ப சிம்பு இப்படி எனக்கு ஒரு தெம்பான கேரக்டர் குடுத்திருக்கார்.
சப்போஸ் இந்த டெர்ரர் கேரக்டர் மட்டும் எனக்கு ஒர்க்-அவுட் ஆயிடுச்சின்னா, தொடர்ந்து விஜயசாந்தி மாதிரி ஆக்ஷன் படம் பண்ண ஆரம்பிச்சிருவேன்’’
யம்மா ஹன்ஸிகா,.. போதும் நிறுத்துமா, நாங்களும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?
No comments:
Post a Comment