பிபாஷா பாசு என்றாலே கவர்ச்சிக்கும் முத்தத்திற்கும் குறைவிருக்காது. அந்த அளவிற்கு ரசிகர்களை கிறங்கடித்து விடுவார்.இவருக்கு தன்னுடைய முன்னாள் காதலர் ஜான் ஆப்ரகாமை சினிமாவில் முத்தமிடுவது என்றால் ரொம்ப வசதியாக இருக்குமாம் இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எவ்வளவுதான் கவர்ச்சியாக நடித்தாலும் ஆன் ஸ்கிரீனில் முத்தக்காட்சியில் நடிக்கும் போது மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். இதேநிலைதான் பிபாஷா பாசுவுக்கும் ஏற்படுமாம். ஆனால் அவருடைய முன்னாள் காதலர் ஜான் ஆப்ரகாமுடன் முத்தக்காட்சியில் நடிக்கும் போதுமட்டும் எந்த வித தடுமாற்றமோ, தயக்கமோ ஏற்படாதாம்.
ஜானியுடன் முத்தக்காட்சியில் நடிக்கும் போது மட்டும் மிகவும் வசதியாக உணர்வேன் என்று சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மிகவும் கூலாக அந்த காட்சியில் நடிக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜான் ஆப்ரகாமுடன் காதலில் திளைத்த போது இருவரும் முத்தக்காட்சியில் நடித்தனர். அது இயல்பாக இருந்ததாக இதழ்களில் எழுதப்பட்டன. தற்போது ஆப்ரகாமுடனான பிரிவிற்குப்பின்னர் அதை நினைவு படுத்தும் வகையில் பிபாசா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜிஸ்ம் படத்தில் முத்தக்காட்சியில் கலக்கியிருந்த பிபாசா, ராஷ் 3 படத்தில் முத்தமழை பொழிந்திருக்கிறாராம்.
No comments:
Post a Comment