Breaking News

Saturday, 15 September 2012

இன்டர்நெட்டில் லீக் ஆனது சூர்யாவின் மாற்றான்! சினிமா


அக்டோபர் 12-ம் தேதி பிரமாண்டமாக ரிலீசாகவிருக்கும் சூர்யாவின் மாற்றான் படத்தின் பெரும்பகுதி காட்சிகள், இன்டர்நெட்டில் வெளியாகிவிட்டதாக தகவல் பரவியுள்ளது.இது படக்குழுவினரையும் சூர்யா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழில் தயாராகும் முக்கிய படங்களின் பாடல்கள் அல்லது சில காட்சிகள் படம் வருவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி பரபரப்பு கிளப்புவதுண்டு. சில நேரங்களில் விளம்பரத்துக்காக சம்பந்தப்பட்ட படங்களைச் சேர்ந்தவர்களே இந்த வேலையைச் செய்வதுண்டு.
படக்குழுவைச் சேர்ந்த யாரோ சிலர் திருட்டுத்தனமாக இந்த வேலையைச் செய்வதும் உண்டு.
ஆனால் மாற்றான் விஷயத்தில், படத்தின் முக்கிய காட்சிகள், பாடல்கள் அனைத்துமே வெளியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது நிஜமாக இருந்தால், உண்மையிலேயே இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு இது பெரும் இழப்பாகும். இந்தப் படம் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து சீரியஸான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் மாற்றான் குழுவினர். ஆனால் வெளியில் இதுபற்றிய செய்தி பரவாமல் இருப்பதற்காக அமைதி காக்கின்றனர்.
மாற்றான் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடி. கல்பாத்தி அகோரம் தயாரிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். அக்டோபர் 12-ம் தேதி படம் வெளியாகிறது.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates