Breaking News

Monday, 10 September 2012

மன்னாரு விமர்சனம் ...

"அழகர்சாமியின் குதிரை" அப்புக்குட்டி கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் அடுத்தபடம் தான் "மன்னாரு". காமெடி நடிகர் மீது கனமான பாத்திரத்தை திணித்திருக்கும் மற்றுமொரு படம்! தன் பாத்திரம் எத்தனை கனமென்றாலும் அதை அலட்டிக் கொள்ளாமல் அசால்டாக தூக்கி சுமந்திருக்கும் அப்புக்குட்டிக்கு தாரளமாக ஒரு "ஹேட்ஸ் ஆப்" சொல்லலாம்!!

சோறு கண்ட இடமே சொர்க்கம்., பீரு... கண்ட இடமே ஊரு... என்று லாரி கிளினிராக ஊர் ஊராய் சுற்றும் அப்புக்குட்டி, ஒரு இக்கட்டான சூழலில் நண்பனின் அழகிய காதலி கம் புது மனைவியுடன் சொந்த ஊருக்கு அருகே உள்ள கொடைக்காணல் போகவேண்டி நிலை! அங்கு எக்கு தப்பாக ஊராரின் கண்களில் சிக்கும் இவர்கள் மன்னாரின் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு எல்லோரும் இவர்களை புருஷன்-பொண்டாட்டியாக முடிவு செய்து பஞ்சாயத்து பண்ண ஊர்காரர்களிடம் மன்னாருக்கும் தன் நண்பரின் ‌மனைவி இவரென்று நாயகி சுவாதியை அடையாளம் காட்ட முடியாத நிலை... சுவாதிக்கும் தான் இன்னார்... என்று சொல்ல முடியாத நிலை! இதனால் மனமுடைந்து போகும் மன்னாரின் மாமன் மகள் மல்லிகா எனும் வைஷாலி படும்பாட்டில் இருந்து மீண்டாரா என்பதும், சுவாதியின் காதல் கணவன், சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட எம்.எல்.ஏ., மகனிடம் சிக்கி படும்பாட்டிலிருந்து தப்பி வந்தாரா...? மன்னாருக்கும் - மல்லிகாவுக்கும் திருமணம் நடந்ததா...? என்பதும் தான் "மன்னாரு" படத்தின் உருக்கமும் கிறக்கமுமான மீதிக்கதை!

"மன்னாரு"-வாக அப்புக்குட்டி தான் ‌காமெடியன் மட்டுமல்ல, கலைப்பட நாயகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நண்பனின் காதலி கம் மனைவியாக வந்து மன்னாருவின் மனைவியாக நம்பப்படும் ராட்டினம் சுவாதி, மாமன்மகள் மல்லிகாவாக வரும் வைஷாலி இருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். தம்பி ராமையா, சிஸர் மனோகர், மன்னாருவின் முரட்டு அப்பாவாக தவசி உள்ளிட்டவர்களும் சபாஷ் சொல்ல வைக்கின்றனர். நிஷாவின் குத்தாட்டமும் படத்தின் பெரும்பலம்!

தம்பி ராமையாவின் வசனம், அகு அஜ்மலின் ஒளிப்பதிவு, உதயனின் இசை உள்ளிட்டவைகளும் மன்னாருவின் பலம்! அப்புக்குட்டியும், சுவாதியும் தாங்கள் கணவன் - மனைவி அல்ல... இப்படி ஒரு இக்கட்டான சூழல் என்பதை ஊர் பஞ்சாயத்தின் மூன் சொல்வதில் என்ன தயக்கம் என்பதை இயக்குநர் எஸ்.ஜெய்சங்கர் இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தார் என்றால் "மன்னாரு" - மனதில் "நின்னாரு" என்று "நச்" என்று இருந்திருக்கும் ! - அவ்வாறு இல்லாதது "மன்னாரு - நின்னாரு" என்ற அளவிலேயே இருக்கிறது!!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates