Breaking News

Friday, 7 September 2012

திருமணம் செய்து குடித்து கும்மாளம் அடிக்கும் கவர்ச்சி நடிகை ?



நடிகை ஷகிலா ஆசாமி படத்தில் பீர் குடித்து குறிசொல்லும் போலி சாமியார் வேடத்தில் வருகிறார்.
மேலும் நடிகை ஷகிலாவுக்கு நிஜமாகவே பீர் குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், படப்பிடிப்பில் இயக்குனரிடம் தினமும் பீர் வாங்கித் தரும்படி தொல்லை செய்ததாகவும் செய்தி பரவியது.
 மேலும் இவர் அரசியல் பிரமுகர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்துவதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து, ஷகிலா கூறுகையில், ஆசாமி படத்தில் நடித்த போது இயக்குனரிடம் பீர் வாங்கித் தரும்படி நான் கேட்கவில்லை. என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது.
 எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் வருகிறேன், அது எனக்கு பிடித்துள்ளது.
நான் அரசியல் பிரமுகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியும் வதந்திதான். இதுவரை எனக்கு திருமணம் நடக்கவில்லை தனியாகத்தான் இருக்கிறேன்.
 முதுமலைக்கு சுற்றுலா சென்ற போது கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தித்தேன். அவர் எனக்கு நெருக்கமான நண்பராக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates