Breaking News

Friday, 14 September 2012

கண்ணா களி தின்ன ஆசையா?’ – ஃபியூஸ் பிடுங்கப்பட்ட ‘பவர்ஸ்டார்’


இன்று மாலை சசிக்குமாரின் ‘சுந்தரபாண்டியன்’  பட பத்திரிகையாளர் காட்சி நடந்துகொண்டிருந்தபோது, எஸ்.எம்.எஸ் கள் வழியாக, தியேட்டருக்குள்  அந்த செய்தி கசிந்துகொண்டிருந்தது. அந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்றே பலரும் விரும்பினார்கள்.
‘அவரா செஞ்சார் இருக்காது. அப்படி எதுவும் நடக்காது. நம்ப முடியவில்லை.நம்ப முடியவில்லை’ என்று சிவாஜி குரலில் ஒருவர் உருக்கமாக பாடவும் செய்தார்.
ஆனால் இவ்வளவு காலமும் கேட்பவர்களுக்கெல்லாம் டொனேஷன் என்ற பெயரில், அவர் வாரி வழங்கியதெல்லாம் சீட்டிங் என்ற புகார் கிளம்பி, இன்று காலை முதல் கீழ்ப்பாக்கம் போலீஸாரால் தேடப்பட்டு, மதியம் கம்பி எண்ண வைக்கப்பட்டு, மாலையில் கழி சாப்பிடவும் தயாராகி இருப்பவர் சாட்சாத் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன்.
உலக அளவில் இணைய தளங்களில் இன்றைக்கு அதிக ரசிகர்கள் கொண்டவர் பவஸ்டார் என்பதை காவல்துறையும்,அரசும் ஏனோ மறந்து பவரின் மீது கைவைத்திருக்கிறார்கள்.
அவர்கள் ஒட்டுமொத்தமாக வெகுண்டு எழுந்தால், சிறைக்கம்பிகள் சிதறிச்சின்னாபின்னமாவது உறுதி. அதை ஒட்டி, ‘ எங்கிட்ட மோதாதே நான் பவராதி பவரனடா, ஜெயிலுக்குள் தள்ளாதே களிதின்ன முடியாதடா’’ என்று பாடியபடியே பவரார் வெளியே வெற்றிநடை போட்டு வரப்போவது உறுதி .

No comments:

Post a Comment

Designed By Blogger Templates